அவசர தேவைக்கு முன்கூட்டியே PF பணத்தை எடுக்கலாம்.. ஆன்லைனில் எப்படி PF அட்வான்ஸ் பணத்தை பெறுவது?

By Ramya s  |  First Published Dec 14, 2023, 1:11 PM IST

பிஎஃப் பணத்தை அவசர காலத்தில் திரும்ப எடுப்பது குறித்தும் அதற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன. எனினும் இதுபற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் பிஎஃப் பணத்தை அவசர காலத்தில் திரும்ப எடுப்பது குறித்தும் அதற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எந்தெந்த சூழ்நிலையில் பிஎஃப் அட்வான்ஸ் தொகையை எடுக்கலாம்?

பிஎஃப் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கும் நிபந்தனைகளில் வேலையின்மையும் ஒன்றாகும். ஒரு EPF சந்தாதாரர் ஒரு மாதத்திற்கு வேலையில்லாமல் இருந்தால், அவர்கள் தங்கள் EPF நிதியில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். இரண்டு மாத வேலையின்மைக்குப் பிறகு, மீதமுள்ள 25 சதவீதத்தை அவர்கள் திரும்பப் பெறலாம். மேலும் ஒரு பிஎஃப் உறுப்பினர், தனது பிஃப் கணக்கை தொடங்கி ஏழு வருடத்திற்கு பிறகு, பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம். மேலும் பிஎஃப் உறுப்பினரின் உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட உறவினர்களின் திருமணச் செலவுகளுக்காக தனது பங்கில் 50 சதவீதம் வரை பணம் திரும்பப் பெறலாம்.

அதே போல் ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு பிஎஃப் கணக்கில் இருந்து முன்கூட்டியே பணம் எடுக்கலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பணத்தைப் பெறலாம். அவசர மருத்துவ காரணங்களுக்காக பிஎஃப் பணத்தில் தங்கள் பங்குக்கு சமமான நிதியை வட்டியுடன் அல்லது அவர்களின் மாத சம்பளத்தின் ஆறு மடங்கு தொகையுடன் எடுக்கலாம். இதனை தனது மருத்துவ செலவுக்கோ அல்லது, பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகளின் மருத்துவ செலவை பயன்படுத்தலாம்.

UPI ஆட்டோ பேமேண்ட் வரம்பு அதிகரிப்பு.. அதுவும் OTP இல்லாமலேயே.. ரிசர்வ் வங்கி சொன்ன மிகப்பெரிய குட்நியூஸ்..

பிஎஃப் அட்வான்ஸ் தொகையை எடுக்க ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  • உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி EPF உறுப்பினர் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
  • Online Services என்பதன் கீழ், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "Claim (Form-31, 19, 10C & 10D)” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உறுப்பினர் விவரங்கள் திரையில் காட்டப்படும். உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி 4 இலக்கங்களை நிரப்பி, ‘Verify’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உறுதிமொழி சான்றிதழில் கையொப்பமிட, மேலும் தொடர ‘Yes’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • Click on the ‘Proceed for Online Claim’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • க்ளைம் படிவத்தில், "I Want to Apply for" என்பதன் கீழ், PF Advance Form 31 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • இந்த முன்பணத்தின் நோக்கம், தேவையான தொகை மற்றும் பணியாளரின் முகவரியையும் வழங்கவும்.
  • சான்றிதழில் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்த நோக்கத்திற்காக ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
  • பணம் எடுப்பதற்கான கோரிக்கையை நிறுவனம் ஒப்புக்கொண்டவுடன், உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுவீர்கள்.
  • வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்க பொதுவாக 15-20 நாட்கள் ஆகும்.
click me!