UPI மூலம் தவறாக பணம் செலுத்தினால், 48 மணி நேரத்திற்குள் ரீஃபண்ட் பெறலாம்.. எப்படி தெரியுமா?

By Ramya s  |  First Published Dec 13, 2023, 11:14 AM IST

தவறான வங்கிக் கணக்கிற்கு நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பினால் புகாரளித்த 2 வேலைநாட்கள் அல்லது 48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இன்றைய டிஜிட்டல் பேமெண்ட் உலகில், UPI என்பது பணத்தை சிரமமின்றி மாற்றுவதற்கான எளிய செயல்முறையாகும். UPI மூலம், சில நொடிகளில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் தற்போது அதிகமான UPI  மூலம் பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் என பல UPI செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் UPI மூலம் பணம் அனுப்பும் போது தவறுதலாக தவறான நபருக்கு பணத்தை அனுப்பிவிடலாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் கவலைப்படுகின்ற்னார். ஆனால் சரியான நேரத்தில் புகாரளித்தால் உங்கள் பணத்தை திரும்ப பெற முடியும்.

தவறான வங்கிக் கணக்கிற்கு நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பினால் புகாரளித்த 2 வேலைநாட்கள் அல்லது 48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. UPI மூலம் தவறாக அனுப்பப்பட்ட பணத்தை எப்படி திரும்பப் பெற உதவும் அனைத்து செயல்முறைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளவும்

நீங்கள் தவறான எண்ணுக்கு பணம் செலுத்தியிருந்தால், முதலில் நீங்கள் அந்த கட்டண தளத்தின் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து உங்கள் புகாரை அளிக்க வேண்டும்.

பிரபலமான கட்டண தளங்களின் புகார் ஹெல்ப்லைன் எண்கள்

ஃபோன்-பே (Phone Pe) ஹெல்ப்லைன் எண்-1800-419-0157
கூகுள் பே (Google Pay) ஹெல்ப்லைன் எண்- 080-68727374 / 022-68727374
பேடிஎம் (Paytm) ஹெல்ப்லைன் எண்- 0120-4456-456
பீம் (BHIM) ஹெல்ப்லைன் எண்- 18001201740, 022- 45414740

NPCI க்கு புகார் செய்யலாம்

இதை தொடர்ந்து நீங்கள் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இணையதளத்திற்குச் சென்று புகார் அளிக்கவும். இதையடுத்து உடனடியாக உங்கள் வங்கியிலும் புகார் அளிக்க வேண்டும்.

எப்படி புகார் செய்வது?

முதலில் நீங்கள் பணம் செலுத்திய யுபிஐ தளத்தின் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும். கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்..
இதற்குப் பிறகு, பிபிபிஎல், எண் (நீங்கள் தவறாகப் பணம் செலுத்தியுள்ளீர்கள்) போன்ற பரிவர்த்தனையின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உங்கள் வங்கியில் புகாரைப் பதிவு செய்யவும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான செயல்முறையை வங்கி முடிக்கவில்லை என்றால், அதன் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் லோக்பாலுக்கு அதைப் பற்றி புகார் செய்யலாம்.
புகார் செயல்முறை முடிந்ததும், உங்கள் பரிவர்த்தனை சரிபார்க்கப்படும், அதன் பிறகு உங்கள் பணம் 2 முதல் 3 வேலை நாட்களில் திருப்பித் தரப்படும்.

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..

பெறுநரைத் தொடர்புகொள்ளவும்: Paytm மற்றும் GPay போன்ற UPI செயலிகளில் குறுஞ்செய்தி அனுப்பும் இடத்தில் பெறுநரைத் தொடர்புகொண்டு, தவறாக அனுப்பப்பட்ட பணம் குறித்து, அந்த பணத்தை திருப்பி அனுப்ப சொல்லி மெசேஜ் அனுப்பலாம்.. மேலும், உங்களிடம் அவர்களின் எண் இருந்தால், அவர்களை அழைத்து, பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கலாம்.

click me!