ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதையடுத்து, இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் கண்ணீருடன் வெளியேறத் தயாராகி வருகிறார்கள்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதையடுத்து, இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் கண்ணீருடன் வெளியேறத் தயாராகி வருகிறார்கள்.
ட்விட்டர் நிறுவனத்தை 44,000 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், செலவைக் குறைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Twitter நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தாரா எலான் மஸ்க்?
மூத்த அதிகாரிகளான சிஇஓ பராக் அகர்வால், நிதித்துறை தலைவர் நெட் செகல், மூத்த சட்ட அதிகாரி விஜயா கடே, சீன் எட்ஜெட் ஆகியோரையும் தலைமை சந்தைத் தொடர்பு அதிகாரி லெஸ்ஸி பெர்லாண்ட், வாடிக்கையாளர் தொடர்பு தலைமை அதிகாரி சாரா பெர்சனோட், ஜீன் பிலிப் ஆகியோரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.
அடுத்ததாக செலவைக் குறைக்கும் நோக்கில், 3ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
இந்த செய்தி கேட்டு இந்தியாவில் உள்ள ட்விட்ட நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே பெரும் குழப்பமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. யாரெல்லாம் நீக்கப்படுவோம், வேலையில் தக்கவைக்கப்படுவோம் என்பது தெரியாமல் கண்ணீருடன் ட்விட்டர்தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் மின்அஞ்சலுக்காக காத்திருக்கிறார்கள்.
ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியிருக்கிங்களா! கவனம்! இதைப் படிக்க மறக்காதிங்க
இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குள் ட்விட்டர் தலைமை அலுவலகத்திலிருந்து எத்தனை பேர் நீக்கப்பட உள்ளனர் என்ற மின்அஞ்சல் வந்துவிடும் என்பதால், ட்விட்டர் ஊழியர்கள் கவலையுடன் உள்ளனர். ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து ஊழியர்களின் தனிப்பட்ட மின்அஞ்சலுக்கு தகவல் கொடுக்கப்பட்டவுடன் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வீட்டுக்குப் புறப்படுவார்கள், மற்றவர்கள் மட்டும் வேலையில் நீடிப்பார்கள்.
ஏராளமான ஊழியர்கள் தங்களின் வேலை பறிபோவது உறுதி என்பதை உணர்ந்து தங்களை தயார் செய்து கொண்டு, ட்விட்டர் வேலையிலிருந்து புறப்படவும் ஆயத்தமாகிவிட்டனர்.
ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் தரப்பில் கூறுகையில் “ வேலையிலிருந்து நீக்குவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் இல்லை. அதற்காக நாங்கள் தயாராகவும் இல்லை. வேலையிலிருந்து நிறுத்தப்போகிறோம் என்றால் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தத் தகவலும் இல்லை. இதனால் ஊழியர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விடுகிறார்கள்” எனத் தெரிவிக்கின்றனர்.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்
ஊழியர்களுக்கு இதுவரை அனுப்பப்பட்ட மின்அஞ்சல் மிகவும் மோசமானதாக, ஊழியர்களுக்கு மன உளைச்சல் தருவதாக இருந்துள்ளது. பொதுவாக டீம் என்ற பெயரிலும், அனுப்புனர் என்ற இடத்தில் ட்விட்டர் என்று மட்டும் இருக்கிறது. இந்த மின்அஞ்சலை யார் அனுப்புகிறார்கள், யார் உத்தரவிடுகிறார்கள் என்ற முறையான தகவல் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது