Gold Rate Today: தங்கம் விலை தொடர் சரிவு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி:இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Nov 4, 2022, 10:20 AM IST
Highlights

தங்கம் விலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த இரு நாட்களில்  சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்கம் விலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த இரு நாட்களில்  சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72ரூபாயும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு 200 ரூபாய்க்கு மேல் சரிவு! இன்றைய நிலவரம் என்ன

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,715 ஆகவும், சவரன், ரூ.37,720 ஆகவும் இருந்தது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.4,706 ஆகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, ரூ.37,648 ஆகவும் சரிந்துள்ளதுகோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,709க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலையில் என்ன மாற்றம்? இன்றைய நிலவரம் என்ன?

தீபாவளிக்குப்பின் தங்கம் விலை சரிந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்த நிலையில், அடுத்த இரு நாட்களில் ரூ.280 குறைந்துள்ளது. 

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் விளக்கம் அளித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால், அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்காக வட்டி கடுமையாக அதிகரிக்கும் என்ற பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியிருப்பதன் தாக்கமும் தங்கத்தின் தேவை மீது எழக்கூடும். ஆதலால், தங்கம் வாங்குவோருக்கு இது உகந்தகாலமாகும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.64.00 ஆகவும், கிலோ ரூ.64,000 ஆகவும் அதே நிலையில் நீடிக்கிறது
 

click me!