Lionel Messi: கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் பைஜூஸ் நிறுவனம் ஒப்பந்தம்: பிராண்ட் அம்பாசிடராக நியமனம்

By Pothy Raj  |  First Published Nov 4, 2022, 9:15 AM IST

உலகளவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான பைஜூஸ் நிறுவனம், தனது “ அனைவருக்கும் கல்வி” என்ற சமூகப்பிரச்சாரத்தின் சர்வதேச தூதராக(பிராண்ட அம்பாசிடராக) அர்ஜென்டினாவைச் சேர்ந்தவரும், கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியை நியமித்துள்ளது. 


உலகளவில் கல்வி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான பைஜூஸ் நிறுவனம், தனது “ அனைவருக்கும் கல்வி” என்ற சமூகப்பிரச்சாரத்தின் சர்வதேச தூதராக(பிராண்ட அம்பாசிடராக) அர்ஜென்டினாவைச் சேர்ந்தவரும், கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸியை நியமித்துள்ளது. 

பாரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக விளையாடிவரும் மெஸ்ஸி பைஜூஸ் ஒப்பந்த்தில் கையொப்பமிட்டு சமச்சீர் கல்விக்கான காரணத்தை ஊக்கப்படுத்த உள்ளார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

சையத் முஷ்டாக் அலி டிராபி: அரையிறுதியில் வென்று ஃபைனலுக்கு முன்னேறிய ஹிமாச்சல பிரதேசம் & மும்பை அணிகள்

கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், சமமானதாகவும் மற்றும் குறைந்த விலையில் வழங்குவதற்கு சர்வதேச அளவில் பைஜூஸ் நிறுவனம், உலகின் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸியுடன் இணைந்து கால் பதிக்கிறது.

கத்தாரில் நடக்கும் 2022ம் ஆண்டும் பிபா உலகக் கோப்பையின், அதிகாரபூர்வ ஸ்பான்ஸராக பைஜூஸ் நிறுவனம் உருவாகி வரலாறு படைத்தது. கால்பந்து விளையாட்டுக்கு உலகளழில் 350 கோடி ரசிகர்கள் உள்ளன, கால்பந்து வீரர் மெஸ்ஸியை மட்டும் சமூக வலைத்தளத்தில் 45 கோடிபேர் பின்தொடர்கிறார்கள். 

லியோ
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனாக பிபா உலகக் கோப்பையை வெல்வதற்கான தனது இறுதிப் பிரச்சாரத்தை லியோனல் மெஸ்ஸி தொடங்கும்போது பைஜூஸ் நிறுவனத்தின் அனைவருக்கும் கல்வியை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களிலும் அவர் இருப்பார்.

வாழ்வா சாவா போட்டியில் அயர்லாந்து & ஆஃப்கானை எதிர்கொள்ளும் நியூசி & ஆஸி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

அனைத்து நேரங்களிலும் சிறப்பாகக் கற்கக்கூடியவராக லியோனல் மெஸ்ஸியை பைஜூஸ் நிறுவனம் பார்க்கிறது. கால்பந்து விளையாட்டில் சிறந்த பாஸ் வீரர், சிறிந்த டிரிப்லர், சிறந்த ப்ரீ கிக் டேக்கர் என்ற பெருமைகளையும், 7 முறை பாலன் டிஓர் விருதுகளையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொருமுறையும் கற்பதால்தான் வெற்றியாளராக மெஸ்ஸியால் வர முடிகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு கற்பதன் நோக்கம், விளையாட்டைப் புரிதல் ஆகியவற்றை அறிய  சிறந்த வழிகாட்டியாக மெஸ்ஸி இருப்பார். 

ஷதாப் கான் 20 பந்தில் அரைசதம் அடித்து சாதனை; இஃப்டிகாரும் அரைசதம்! தென்னாப்பிரிக்காவுக்கு கடினஇலக்கு

பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான திவ்யா கோகுல்நாத் கூறுகையில் “ சர்வதேச தூதராக கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதிகிறோம். இந்த தலைமுறையில் மெஸ்ஸி திறமையானவர், சிறந்து விளங்குபவர், எல்லாவற்றிலும் உள்ள அவரின் மனநிலை, பணிவு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை பைஜூன் பிராண்ட் மதிப்புகளுடன் ஆழமாக எதிரொலிக்கின்றன. அடிமட்டத்திலிருந்து வளர்ந்து வந்து சிறந்த வீரராக மெஸ்ஸி ஜொலித்து வருகிறார்.

அதன்படிதான் பைஜூஸ் கல்வி நிறுவனமும், அனைவருக்கும் கல்வி என்ற வாய்ப்பை வழங்குகிறது. மனித திறனை மேம்படுத்தும் சக்தியை மெஸ்ஸியை விட  யாரும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எல்லா காலத்திலும் சிறந்த வீரர், எல்லா காலத்திலும் சிறந்த கற்றவராக மெஸ்ஸி  இருப்பதில் ஆச்சரியமில்லை” எனத் தெரிவித்தார்

லியோனல் மெஸ்ஸி கூறுகையில் “ கற்றலை அனைவரும் காதலிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் எனது நோக்கத்துடன் பைஜூஸின் நோக்கமும் ஒத்திருக்கிறது என்பாதால், பைஜூஸுடன் நான் ஒப்பந்தம் செய்தேன்.

உயர்தர கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகளவில் லட்சக்கணக்கான  மாணவர்களின் வாழ்க்கைப் பாதைகளை பைஜூஸ் மாற்றியுள்ளது. இளம் கற்கும் மாணவர்களை முதலிடத்தை அடைய ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

 

click me!