Share Market Today: 2-வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏமாற்றம்! சரிவு ஏன்?

By Pothy RajFirst Published Nov 3, 2022, 4:03 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி வர்த்தகப் புள்ளிகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி வர்த்தகப் புள்ளிகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிவில் முடிந்தன. 

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ், 54 புள்ளிகள் குறைந்தும்  தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18 புள்ளிகள் குறைந்தும், 18,064 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தின.
இந்த சரிவிலிருந்து இந்திய சந்தைகள் மீளும் என்று வர்த்தகம் செல்லச் செல்ல எதிர்பார்க்கப்பட்டது.

ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கியிருக்கிங்களா! கவனம்! இதைப் படிக்க மறக்காதிங்க

ஆனால், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீத அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் அவசர நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. 

இதனால் முதலீட்டாளர்கள் வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை, ரிசர்வ் வங்கியும்வட்டிவீதம் குறித்து அறிவிப்பு வெளியிடுமா என்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

இதனால் காலையில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் மாலை முடியும்வரை நீடித்தது. மாலை வர்த்தகம் முடியும்போது, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து, 60,836 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 30  புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 18,052 புள்ளிகளில் நிலை பெற்றது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ தோல்வி:மத்திய அரசுக்கு விளக்கமளிக்கிறார்சக்திகாந்த தாஸ்

அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டியை 75 புள்ளிகள் உயர்த்தியதும், ரிசர்வ்வங்கி அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததும் முதலீட்டாளர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த இரு காரணிகளும் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகும். 
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 16 பங்குகள் லாபத்திலும், 14 பங்குகள் சரிவிலும் வர்த்தக்ததை முடித்தன. 

டைட்டன், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல், மாருதி, டாடா ஸ்டீல், டாக்டர்ரெட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை ஈட்டின. மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.

பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி: காரணம் என்ன?

நிப்டியில் டெக் மகிந்திரா, ஹின்டால்கோ, பவர்கிரிட், என்டிசிபிசி, இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் இழப்பைச் சந்தித்தன. எஸ்பிஐ, டைட்டன், யுபிஎல், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை லாபமடைந்தன. தேசியபங்குச்சந்தையில் வங்கி, ரியல்எஸ்டேட், எப்எம்சிஜி துறைகளைத் தவிர மற்ற துறைகள் லாபத்தில் முடிந்தன

click me!