நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியாதது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.
நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியாதது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.
நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் சராசரியாக வைக்கவும், அதிகபட்சமாக 6 சதவீதம் வரை பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு இலக்கு வைத்துள்ளது.
எலான் மஸ்க் என்ன செய்வார்? ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்
ஆனால், தொடர்ந்து 8 மாதங்களுக்கும் மேலாக பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டு இலக்கைவிட அதிகரித்தது. அதிகபட்சமாக 8 சதவீதத்தைக் கடந்த நிலையில் கடந்த மே மாதம் ரெப்போ ரேட்டை உயர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது.
கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 3 நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. பணவீக்கம் 7 சதவீதமாகக் குறைந்தநிலையில், மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து, கடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட் வீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தற்போது கடனுக்கான வட்டிவீதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது:இந்திய சந்தையில் பாதிப்பு ஏற்படுமா?
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அரசிடம் விளக்கம் அளிக்கவும், அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆர்பிஐ சட்டம் 45ZN கீழ் இன்று ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டம் கூடியுள்ளது.
வழக்கமாக ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டம் டிசம்பர் மாதம் கூட வேண்டியது. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தோல்வி அடைந்தமைக்காக விளக்கம் அளிக்க கவர்னர் சக்திகாந்த தாஸ் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
பணவீக்கத்தை 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன் என்பது குறித்து ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்கிறது.
எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த இலக்கு வைக்கும் நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. அதன்பின் கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் எழுதுவது இதுதான் முதல்முறையாகும்.
செப்டம்பர் மாத பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் அக்டோபர் 12ம் தேதி வெளியாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் வெளியான ஒரு மாதத்துக்குள் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த வகையில் இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் பணவீக்கதத்தை கட்டுப்படுத்த தோல்வி அடைந்தது குறித்த விளக்க அறிக்கையை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்ப உள்ளது.
இதற்காகவே ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ சட்டம் 45இசட்என் பிரிவின் கீழ் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.