தங்கம் விலையில் கடந்த இரு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சவரனுக்கு 200 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.
தங்கம் விலையில் கடந்த இரு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று சவரனுக்கு 200 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 26ரூபாயும், சவரனுக்கு 208 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,741 ஆகவும், சவரன், ரூ.37,928 ஆகவும் இருந்தது.
தங்கம் விலையில் என்ன மாற்றம்? இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) இருந்த கிராமுக்கு 26 ரூபாய் சரிந்து ரூ.4,715 ஆகவும், சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, ரூ.37,720 என்று வீழச்சி அடைந்துள்ளது
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,715க்கு விற்கப்படுகிறது.
தீபாவளிக்குப்பின் தங்கம் விலை பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. ரூ.38 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தாலும் தீபாவளி பண்டிகைக்குப்பின் மீண்டும் சரியத் தொடங்கியது. திங்கள், செவ்வாய்கிழமை தங்கம் விலை உயர்ந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சவரனுக்கு ரூ.208 இன்று குறைந்துள்ளது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..
கடந்த வாரத்தில் மட்டும் கடைசி 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. இந்த வாரம் தொடங்கிய 2 நாட்களில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து இன்று ரூ.208 குறைந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தியிருப்பதால், தங்கத்தின் மீதான முதலீடு சர்வதேச அளவில் குறைய வாய்ப்புள்ளது. இதனால், தங்கம் விலை குறையலாம் என்பதால் தங்கம் வாங்குவோருக்கு இது உகந்தகாலமாகும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.64.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து ரூ.64,000 ஆகவும் விற்கப்படுகிறது