ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களில் பாதிக்கு மேற்பட்டோரை வேலையிலிருந்து நீக்க, டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களில் பாதிக்கு மேற்பட்டோரை வேலையிலிருந்து நீக்க, டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்படி, ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலையிலிருந்து நீக்கப்பட உள்ளனர். இந்த முடிவை நாளை எலான் மஸ்க் அறிவிப்பார் என்று ட்விட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்னாச்சு எலான் மஸ்க் ! சமையலறை சிங்க்குடன் ட்விட்டர் அலுவலகம் வந்த வீடியோவால் பரபரப்பு
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44000 கோடி டாலருக்கு விலைக்கு வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், செலவைக் குறைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக வருமானத்தை உயர்த்தும் நோக்கில் ட்விட்டரில் ப்ளூடிக் வாங்க வேண்டுமென்றால், 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அடுத்ததாக நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மூத்த அதிகாரிகள் பலரை வேலையிலிருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான்ஸ் மஸ்க் வாங்கியவுடன் சிஇஓ பராக் அகர்வால், நிதித்துறை தலைவர் நெட் செகல், மூத்த சட்ட அதிகாரி விஜயா கடே, சீன் எட்ஜெட் ஆகியோரை வேலையிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து தலைமை சந்தைத் தொடர்பு அதிகாரி லெஸ்ஸி பெர்லாண்ட், வாடிக்கையாளர் தொடர்பு தலைமை அதிகாரி சாரா பெர்சனோட், ஜீன் பிலிப் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
அடுத்ததாக செலவைக் குறைக்கும் நோக்கில், ஊழியர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்ப எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.
வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு 2 மாத ஊதியம் இழப்பீடாகத் தரவும் ட்விட்டர் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற சலுகை இருந்தது. அதை ரத்து செய்த எலான் மஸ்க், ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் கொண்டு வர உள்ளார்.
எலான் மஸ்க் என்ன செய்வார்? ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்
அடுத்ததாக பொறியாளர், வாடிக்கையாளர் பிரிவு, சந்தைப்பிரிவு ஆகியவற்றிலும் எந்தெந்த ஊழியர்களை நீக்கலாம், எத்தனை ஊழியர்களை நீக்கலாம் என்ற விவரங்களையும் எலான் மஸ்க் கேட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர்களிடம் செய்திநிறுவனம் சார்பில் கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்