RBI Meeting: ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஏன் பணவீக்கம் குறி்த்து விளக்க அறிக்கை அனுப்பியது? ஓர் அலசல்

By Pothy RajFirst Published Nov 4, 2022, 11:46 AM IST
Highlights

நாட்டின்  பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை மீறி தொடர்ந்து 3 காலாண்டுகளாகச் சென்றதையடுத்து, அது குறித்து விளக்கம் அளித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை அனுப்பியதன் நோக்கம் குறித்து இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது.


நாட்டின்  பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை மீறி தொடர்ந்து 3 காலாண்டுகளாகச் சென்றதையடுத்து, அது குறித்து விளக்கம் அளித்து மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை அனுப்பியதன் நோக்கம் குறித்து இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

நாட்டின் பணவீக்கத்தை குறைந்தபட்சம் 2 சதவீதத்துக்குள்ளும்  சராசரியாக 4 சதவீதமாகவும், அதிகபட்சமாக 6 சதவீதம் வரை பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு இலக்கு வைத்துள்ளது. 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ தோல்வி:மத்திய அரசுக்கு விளக்கமளிக்கிறார்சக்திகாந்த தாஸ்

ஆனால், தொடர்ந்து 8 மாதங்களுக்கும் மேலாக பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டு இலக்கைவிட அதிகரித்தது. அதிகபட்சமாக 8 சதவீதத்தைக் கடந்த நிலையில் கடந்த மே மாதம் ரெப்போ ரேட்டை உயர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது.

கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 3 நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. ஆனாலும் பணவீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அளவுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.

 கடைசியாக நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ ரேட் வீதம் 50 புள்ளிகள் உயர்த்தியதால், கடனுக்கான வட்டிவீதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 3 காலாண்டுகளாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாததையடுத்து, மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை அனுப்பியது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது:இந்திய சந்தையில் பாதிப்பு ஏற்படுமா?

பணவீக்கம் குறித்து ஆர்பிஐக்கு பிறப்பித்த உத்தரவு என்ன?

2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஆர்பிஐ சட்டத்திருத்தின்படி, பணவீக்கத்தை குறிப்பிட்ட இலக்கிற்குள் ரிசர்வ் வங்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

இதற்காக ரிசர்வ் வங்கிக்கு, நிதிக்கொள்கைக் குழுவும், அனைத்து விதமான நிதிக்கட்டுப்பாடு நடவடிக்கைகளும் உள்ளன. இதன் மூலம் பணவீக்கத்தை குறைந்தபட்சம் 2 சதவீதமாகவும், சராசரியாக 4 சதவீதம்,  அதிகபட்சமாக 6 வரை வைக்க முடியும். நாட்டில் விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும், பொருளாதார வளர்ச்சியை சீராகக் கொண்டு செல்லவும் ஆர்பிஐ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட அதாவது 6%விட அதிகமாக பணவீக்கம் 3 காலாண்டுகள் வரை சென்றால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தோல்வி அடைந்துவிட்டது என்று எடுக்க வேண்டும்.  இவ்வாறு நடக்கும் போது ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு விளக்கம் அளித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் - ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு !!

1.    பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தமைக்கு காரணம்

2.    பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

3.    பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டுவர எத்தனை காலம் தேவைப்படும் என்பது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலவரம் என்ன?

நாட்டில் சில்லறை பணவீக்கம் அளவு கடந்த ஜனவரியில் இருந்து 6 சதவீதத்தைக் கடந்துதான் செல்கிறது. ஏப்ரலில் 8 சதவீதத்தைக் கடந்தது.இதற்கு உக்ரைன் ரஷ்யா போர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணிகள் உள்ளன. 

சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல!அக்.31 உலக சேமிப்பு நாள்: சேமிப்பின் அவசியம், முக்கியம் என்ன?

இதையடுத்து, மே மாதத்தில் இருந்து ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. இதுவரை வட்டியில் 190 புள்ளிகள் உயர்த்தியபின்பும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. வட்டிவீதம் தொடர்ந்து அதிகரிப்பதால், கடனுக்கான வட்டி கடுமையாக அதிகரித்துள்ளது, பொருளாதார வளர்ச்சியும் குறையும் ஆபத்து உள்ளது

click me!