gold rate today: ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை! மீண்டும் ரேட் உயர்ந்தது: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Aug 4, 2022, 10:10 AM IST
Highlights

தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் இந்த வாரம் நகர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்கள் விலை உயர்ந்தும், குறைந்தும் இருந்த நிலையில் இன்று விலை திடீரென உயர்ந்துள்ளது

தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் இந்த வாரம் நகர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்கள் விலை உயர்ந்தும், குறைந்தும் இருந்த நிலையில் இன்று விலை திடீரென உயர்ந்துள்ளது

 சென்னையில் இன்று காலை நிலவரப்படி,  தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 23ரூபாயும், சவரணுக்கு 184 ரூபாயும் உயர்ந்துள்ளது.  

காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,802க்கும், சவரன் ரூ.38,416க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 23 ரூபாய் உயர்ந்து ரூ4,825ஆகவும், சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.38,600க்கும் விற்பனையாகிறது.

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4825ஆக விற்கப்படுகிறது. 

இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியா! அப்படி ஏதும் இல்லையே:சீதாராமன் உறுதி

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விலை சரிந்தும், இரு நாட்களாக விலை அதிகரித்தும் இருக்கிறது.  ஏறக்குறைய கிராமுக்கு 30 ரூபாயிலும், சவரனுக்கு 240 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது.

தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

2021-22 நிதியாண்டில் 5.83 கோடி பேர் வருமானவரி ரிட்டன் தாக்கல்

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா அதிகரித்து, ரூ.63.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,200க்கும் விற்கப்படுகிறது.

click me!