தங்கத்தின் விலை இந்த வாரத்திலிருந்து ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது, விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை இந்த வாரத்திலிருந்து ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது, விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 18ரூபாயும், சவரணுக்கு 144 ரூபாயும் குறைந்துள்ளது.
undefined
இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியா! அப்படி ஏதும் இல்லையே:சீதாராமன் உறுதி
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,820க்கும், சவரன் ரூ.38,560க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கம் விலை சரிந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் சரிந்து ரூ4,802ஆகவும், சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.38,416க்கும் விற்கப்படுகிறது.
2021-22 நிதியாண்டில் 5.83 கோடி பேர் வருமானவரி ரிட்டன் தாக்கல்
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4802ஆக விற்கப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்திருந்த தங்கம் விலை வாரத்தில் கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திங்கள்கிழமை விலை குறைந்த நிலையில் நேற்று விலை அதிகரித்தது, இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு 56 ரூபாயிலும், சவரனுக்கு 448 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வருகிறது.
தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை தீவிரமாக உயர்த்தும் நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி... கிடைத்தது 1.5 லட்சம் கோடிதான்!!
இதனால், டாலர் மீதான முதலீடு, ஆர்வம் குறைந்து,தங்கத்தின் பக்கம் திரும்பலாம். இதன் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா அதிகரித்து, ரூ.63.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.63,000க்கும் விற்கப்படுகிறது.