reat seat belt:காரில் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் பொருளை விற்காதீர்கள்: அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

By Pothy RajFirst Published Sep 8, 2022, 6:34 AM IST
Highlights

காரில் சீட் பெல்ட் போடாவிட்டால் அடிக்கும் அலாரத்தை நிறுத்தும் பொருளை தங்கள் வர்த்தகத் தளத்தில் விற்பனை செய்யவேண்டாம் என்று அமேசானியிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

காரில் சீட் பெல்ட் போடாவிட்டால் அடிக்கும் அலாரத்தை நிறுத்தும் பொருளை தங்கள் வர்த்தகத் தளத்தில் விற்பனை செய்யவேண்டாம் என்று அமேசானியிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

காரில் சீட் பெல்ட் போடாவிட்டால் ஒருவிதமான எச்சரிக்கை மணி அல்லது பீப் அலாரம் கேட்டுக்கொண்டே இருக்கும். சீட் பெல்ட்டின் மெட்டல் கிளிப், பெல்ட்டில் லாக் ஆனால் மட்டும்தான் எச்சரிக்கை மணி நிற்கும். ஆனால், இந்த எச்சரிக்கை மணியை ஏமாற்றும் வகையில் மெட்டல் கிளிப்பை மட்டும் அமேசான் விற்பனை செய்து வருகிறது.

திமிங்கல வாந்தியை கடத்திய 4 பேர் கைது… ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி பறிமுதல்!!

இந்த மெட்டல் கிளிப்பை மட்டும் வாங்கி, சீட் பெல்ட் போடும் இடத்தில் வைத்துவிட்டால் சீட் பெல்ட் போடப்பட்டதாக எண்ணி அலாரம்நின்றுவிடும். ஆனால், உண்மையில் சீட் பெல்ட் போடாமல் தவிர்க்கவே இந்த கருவி பயன்படுகிறது.

ஆனால், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருப்பதை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய சூழலில் சீட்பெல்ட் போடாவிட்டால் எழும் அலாரத்தை ஏமாற்றும் கருவியை விற்பது அரசின் நோக்கத்தை, திட்டத்தை வீணாக்கும் முயற்சியாகும்.

அதிலும், டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்புக்கு சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரை வாங்கிய ஜோஸ் ஆலுக்காஸ்… ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதன் தொழில்நுட்ப அம்சங்கள்!!

இந்த சம்பவத்துக்குப்பின் காரின் பின்பகுதியில் அமர்ந்திருப்பவரும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் சில நாட்களில் வெளியிடும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆனால், சீட் பெல்ட் அணியாவிட்டால் காரில் வரும் அலாரத்தை நிறுத்த மெட்டல் கிளிப் அமேசானில் விற்கப்படுவதாக அறிந்தோம். 

seat belt: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

அந்த கிளிப் மூலம் சீட் பெல்ட் அணியாமல் வரும் அலாரத்தை நிறுத்த முடியும். சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்க மக்கள் இதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்த மெட்டல் கிளிப்விற்பனையை நிறுத்தக் கோரியுள்ளோம்.

 2021ம் ஆண்டில் சாலை விபத்துகளில் இந்தியாவில் 1.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் இந்தியாவில் சாலை விபத்தில் இறக்கிறார் என்று உலக வங்கி கவலைத் தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட் போடாவிட்டால் வரும் அலாரம் ஓட்டுநர், முன்பக்கம் அமர்ந்திருப்பவருக்கு மட்டுமல்ல, பின்சீட்டில் அமர்ந்திருப்பவரும் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் வரும்” எனத் தெரிவி்த்தார்
மத்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு இதுவரை அமேசானிடம் இருந்து பதில் இல்லை. 
 

click me!