
தங்கம் விலை கடந்த இரு நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.55 சரிந்துள்ளது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,750 ஆகவும், சவரன், ரூ.38,000 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,695ஆக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்து, ரூ.37,560ஆக சரிந்துள்ளது.
irctc: railways: ரயில் லேட்டா? ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை கேட்க மறக்காதீங்க
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,695ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த இரு நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம்விலை கிராமுக்கு ரூ.28 சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55 குறைந்தது, சவரனுக்கு ரூ.440 வீழ்ச்சி அடைந்துள்ளது.
nse:ravi narain:ED: என்எஸ்இ முன்னாள் சிஇஓ ரவி நரேன் நள்ளிரவில் கைது: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்குப்பின், தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்து இன்று மீண்டும் சவரன் ரூ.38ஆயிரத்தைத் தொட்ட நிலையில் மீண்டும் ரூ.37ஆயிரத்துக்கு சென்றது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.58.00ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து ரூ.58,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.