nse:ravi narain:ED: என்எஸ்இ முன்னாள் சிஇஓ ரவி நரேன் நள்ளிரவில் கைது: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

By Pothy RajFirst Published Sep 7, 2022, 9:30 AM IST
Highlights

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் தேசியபங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேனை நேற்று நள்ளிரவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் தேசியபங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேனை நேற்று நள்ளிரவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

கோ-லொகேஷன் வழக்கு மற்றும் என்எஸ்சி ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டல், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கிலும் ரவி நரேனுக்கு தொடர்பு இருப்பதையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

cyrus mistry: seat belt:tata sons: சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

தேசியப் பங்குச்சந்தையில் மேலாண் இயக்குநராக கடந்த 1994 ஏப்ரல் முதல் 2013 மார்ச் வரை ரவி நரேன் பதவியில் இருந்தார். அதன்பின் என்எஸ்இ வாரியத்தில் துணைத்தலைவராக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2017 ஜூன் மாதம் வரை இருந்து பின்னர் ராஜினாமா செய்தார்.

கோ-லொகேஷன் வழக்கில் தேசியப் பங்குச்சந்தையி்ன் முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை ஏற்கெனவே அமலாக்கப்பரிவு கைதுசெய்துள்ளது. அவர் மீது என்எஸ்இ ஊழியர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டது தொடர்பான வழக்கையும் சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த இரு வழக்குகளிலும் விசாரணை நடந்து வருகிறது.

gdp of india:உலகப் பொருளாதாரத்தில் 3வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்: ஜெர்மனி, ஜப்பானை தோற்கடிக்கும்

தொலைப்பேசி ஒட்டுக்கேட்புக்கு உதவியாக இருந்த மும்மை நகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேவும் கடந்த ஜூலை 19ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கடந்த மே 19ம் தேதி சஞ்சய் பாண்டே மீது சிபிஐ முதல்தகவல்அறி்க்கை பதிவு செய்தது. சஞ்சய் பாண்டே கடந்த 2001ம்ஆண்டு போலீஸ் துறையிலிருந்து தனது  பதவியை ராஜினாமா செய்தபின், ஐசெக் சர்வீஸ் என்ற கணினி பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியின் விதிகளை மீறி பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டது.

irctc: railways: ரயில் லேட்டா? ஐஆர்சிடிசி வழங்கும் இந்த உரிமையை கேட்க மறக்காதீங்க

குறிப்பாக கோ-லொகேஷன் ஊழலில், இந்த நிறுவனம் ஈடுபட்டு, பங்குச்சந்தையில் பரிமாற்றத் தகவல்களை விரைவாகப் பெற்று சில தரகு நிறுவனங்களுக்கு வழங்கி ஆதாயம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!