seat belt: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

Published : Sep 07, 2022, 04:51 PM ISTUpdated : Sep 07, 2022, 05:04 PM IST
seat belt: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

சுருக்கம்

காரின் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

காரின் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் சீட் பெல்ட் அணிவதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. இதற்கான முறைப்படியான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மறைவுக்குப்பின் காரில் சீட் பெல்ட் அணிவது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதிகபாதுகாப்பு அம்சம் நிறைந்த  பென்ஸ் காரில் மிஸ்திரி பயணித்தும் சீட் பெல்ட் அணியாதது விபத்தில் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளது

bangalore floods: பட்டர் மசாலா தோசை சாப்பிடுங்க! பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வியால் நெட்டிஸன்கள் கொந்தளிப்பு

இந்நிலையில் பிஸ்னஸ் ஸ்டான்டர்டு நாளேடு சார்பில் “ இந்தியா@75-கடந்த நிகழ்கால மற்றும் எதிர்காலம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: 

காரில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் சீட் பெல்ட் அணிவது விரைவில் கட்டாயமாகிறது. இதற்கான அறிவிப்பு முறைப்படி அடுத்த 3 நாட்களில் மத்திய அரசு வெளியிடும். சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு என்ற ஒரு பிரிவில்தான் நான் என்னால் முடிந்த அளவு சிறப்பாகப் பணியாற்றியபோதிலும் வெற்றி பெற முடியவில்லை. அனைத்து வாகனங்களிலும் ஏர்பேக்இருப்பதைப் போன்று சீட் பெல்ட் வைத்திருப்பதும் கட்டாயமாக்கப்படும்

சைரஸ் மிஸ்திரி மறைவு!ஷபூர்ஜி பலூன்ஜி குழுமத்தின் 3,000கோடி டாலர் சொத்து என்னாகும்?

உலகளவில் சாலை விபத்துகளிலும் உயிரிழப்புகளில் இந்தியா மோசமான இடத்தில்இருக்கிறது. 2021ம் ஆண்டில் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்ததில் 1.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துகளில் உயிரிழப்பைச் சந்திப்பவர்களில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34  வயதுள்ளபிரிவினர்தான். சாலை விபத்துகளும், கொரோனா தொற்றும் சேர்ந்துநாட்டின் பொருளாதாரத்தில் 3 % பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சாலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2024ம் ஆண்டுக்குள் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. தற்போது ஆண்டுக்கு ரூ.40ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை தற்போது 1.40 லட்சம் கி.மீ தொலைவுக்கு இருக்கிறது, இதை 2 லட்சம் கி.மீ அளவுக்கு உயர்த்த மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது

செயற்கைக்கோள் அடிப்படையில் டோல்கேட்டில் பில் வசூலிக்கும் முறையை செயல்படுத்த அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வேலைபார்ப்போர் எண்ணிக்கை குறைக்கப்படும். ஏற்கெனவே பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டு எந்த வாகனமும் 25வினாடிக்கு மேல் நிற்காத அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

பேட்டரி கார்களைப் போல், பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்பது நீண்டகாலக்கனவு. தேசிய நெடுஞ்சாலையில் 50ஆயிரம் பேட்டரி  பேருந்துகளைஇயக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது 5ஆயிரம் பேட்டரிகார்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. 

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!
Gold Rate Today (டிசம்பர் 09) : குறைய தொடங்கியது தங்கம் விலை.! சந்தோஷமாக நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!