
மே மாதத்தில் மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 200 சதவீதம் அதிகரி்த்து, 53,726 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என அந்நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
ஆனால், கொரோனா காலத்தில் அதாவது 2021ம் ஆண்டு மே மாதத்தில் மகிந்திரா அன்ட் மகிந்திரா கார்கள் விற்பனை 17,747ஆகத்தான் இருந்தது. உள்நாட்டு சந்தையில் மகிந்திரா கார்கள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 8004 ஆக இருந்த நிலையில் 2022 மே மாதத்தில் 26,904 ஆக இருக்கிறது.
மகிந்திரா நிறுவனத்தின் வர்த்தகரீதியிலான வாகனங்கள் விற்பனை 24,794 ஆகஅதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் மே மாதத்தில் 7,508ஆக இருந்தது. மகிந்திரா நிறுவனம் கடந்த மே மாதத்தில் 2,028 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,935 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தன.
மகிந்திராவின் எஸ்யுவி மாடல் ரக கார்கள்தான் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. அந்த ரக கார்கள் மட்டும் 26,632 விற்பனையாகியுள்ளன. குறிப்பாக எக்ஸ்யுவி700,தார் ரக கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.இதற்கிடையே புதுப்பிக்கப்பட்ட ஸ்கார்ப்பியோ-என் ரக வாகனத்தையும் மகிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரக காரக்ளுக்கும் அதிகமான தேவை எழுந்துள்ளது.
கனரக வாகன தயாரிப்பாளரான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வாகன விற்பனையும் கடந்த மே மாதத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 13,273 வாகனங்கள் விற்பனையாகின.கடந்த ஆண்டு மே மாதம் அசோக் லேலண்ட்நிறுவனம் 3,199 வாகனங்கள்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால், 2022 மே மாதத்தில் 4 மடங்கு விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டில் அசோக் லேலண்ட் விற்பனை 12,458 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் 2,738 வாகனங்கள் மட்டும்தான் விற்பனையாகியிருந்தன. நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் விற்பனை கடந்த மாதம் 7,268ஆக அதிகரி்த்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1513 ஆக இருந்தது. லகுரக வர்த்தக வாகனங்கள் உள்நாட்டளவில் கடந்த மாதம் 5,190 விற்பனையாகின, கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,225 விற்பனையானது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.