Union Budget 2023: பட்ஜெட் அறிவிப்பில் விலை குறையும், உயரும் பொருட்கள் என்னென்ன? முழு விவரம்

By Pothy Raj  |  First Published Feb 1, 2023, 1:39 PM IST

Union Budget 2023:மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து, பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்து அறிவித்துள்ளார்.


Union Budget 2023: மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து, பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியைக் குறைத்து அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் சுங்க வரிக் குறைப்பாலும், உயர்த்தப்பட்டதாலும் ஏராளமான பொருட்கள் விலை வரும் நிதியாண்டில் இருந்து உயர உள்ளன, குறையவும் உள்ளன. 

Latest Videos

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்ததாவது:

கடந்த 2014-15ல் மொபைல் போன் உற்பத்தி 5.8கோடியாக இருந்தது இது கடந்த நிதியாண்டில் 31 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், நமக்குரிய இடத்தை உலகளவில் தக்கவைக்கவும் இந்தியா முயன்று வருகிறது

உலகளவில் மொபைல் போன் உற்பத்தியில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள், சலுகைகள்தான் கடும் போட்டியான சந்தையில் நிலைத்து நிற்கக் காரணமாகும்.

சுகாதாரத்திற்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை; சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு!!

விலை குறையும் பொருட்கள்

  • அந்த வகையில் டிவி பேனல்களுக்கான சுங்கவரி 2.5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 
  • தாமிர கழிவுப் பொருட்களு்ககான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதமாகவே தொடரும்
  • மொபைல் போன் தயாரிப்புக்கான சில மூலப் பொருட்களுக்கான சுங்க வரிக் குறைப்பு
  • செயற்கை வைரங்கள் தயாரிப்புக்கான மூலப் பொருட்களுக்கு சங்க வரிக் குறைப்பு
  • இறால்களுக்கான உணவு இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு

விலை உயரும் பொருட்கள்

  • இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் கட்டிகளுக்கான சுங்க வரி உயர்வு
  • சிகெரெட்டுக்கான அடிப்படை சுங்கவரி 16 சதவீதம் அதிகரிப்பு
  • இறக்குமதி செய்யப்படும் ரப்பர்களுக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பு
  • சமையர்கூடங்களில் பயன்படுத்தப்படும் சிம்னி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 
click me!