மீண்டும் ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! பாஜக கூட்டணி ஆட்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்!

By SG Balan  |  First Published Jun 5, 2024, 12:02 PM IST

சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் நீடிப்பதாக கூறியிருக்கிறார். நிதிஷ் குமாரின் ஜே.டி.எஸ். கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதின் எதிரொலியாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது.


2024 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் மோசமான வீழ்ச்சிக்குப் பிறகு இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளன.

செவ்வாயன்று மோடி தலைமையிலான என்டிஏவுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களிலேயே வெற்றி கிடைத்தது. இதன் எதிரொலியால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தை பாதிக்கப்பட்டன. இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இரண்டும் 5%க்கு மேல் சரிவுடன் முடிவடைந்தன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட மோசமான சறுக்கலாகவும் இருந்தது. வர்த்தகத்தில் ஆறரை மணிநேரத்தில் ரூ.31 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியதுமே மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகமானது.  பகல் 11 மணிக்கு சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் அதிகரித்து, 73,571 புள்ளிகளில் வணிகமானது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடு நிஃப்டி 508 புள்ளிகள் உயர்ந்து 22,393 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது.

71 லட்சம் பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப்! விதிமுறைகளை மீறினால் இதுதான் நடக்கும்!

இதன் மூலம் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்சி கிடைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் நீடிப்பதாக கூறியிருப்பதால் பாஜக தொடர்ந்து 3வது முறை ஆட்சி அமைப்பது நிச்சயமாகி இருக்கிறது.

இன்று காலை ஆந்திர மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாயுடு, "தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார். ஆந்திர மக்களின் நலனுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் மாநில ஜே.டி.எஸ். கட்சியும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதின் எதிரொலியாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் 4 முதல் 6 சதவீத வளர்ச்சியுடன் வர்த்தகத்தில் அதிக பலன் அடைந்து வருகின்றன.

3வது முறை வெற்றி வாகை சூடிய மோடி! உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து! காத்திருக்கும் அமெரிக்கா!

click me!