Stock Market Update: சென்செக்ஸ் 6,100 புள்ளிகள் சரிவு! ரூ.26 லட்சம் கோடி வீழ்ச்சியில் வர்த்தகம்!

By SG Balan  |  First Published Jun 4, 2024, 11:56 AM IST

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. பெரும்பாலான துறைகளில் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி ஆகியவை பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளன.


நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடுமையான போட்டி காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை சந்தைகள் தொடக்கத்தில் வியத்தகு அளவு மோசமடைந்தன. சென்செக்ஸ் 1,708.54 புள்ளிகள் அல்லது 2.23% குறைந்து 74,760.24 ஆகவும், நிஃப்டி 488.55 புள்ளிகள் அல்லது 2.1% குறைந்து 22,775.35 ஆகவும் இருந்தது.

Latest Videos

undefined

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் கிட்டத்தட்ட 6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. பெரும்பாலான துறைகளில் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி ஆகியவை பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளன.

சென்செக்ஸ் 4,410.17 புள்ளிகள் அல்லது 5.77% சரிந்து 72,058.61 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1,377.35 புள்ளிகள் அல்லது 5.92% சதவீதம் வீழ்ச்சியுடன் 21,886.55 புள்ளிகளில் வர்தகமாகிறது.

Stock Market: தடாலடி சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச்சந்தையில் பிரதிபலிக்கும் தேர்தல் முடிவுகள்!

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு கடுமையான போட்டி காணப்படுவதன் எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

 பாஜக தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இருப்பினும், பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்க உள்ளது. வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Modi vs Ajay Rai: வாரணாசியில் மோடிக்கு டஃப் கொடுக்கும் அஜய் ராய்! உ.பி.யில் கெத்து காட்டும் இந்தியா கூட்டணி!

 

click me!