Stock Market: தடாலடி சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச்சந்தையில் பிரதிபலிக்கும் தேர்தல் முடிவுகள்!

By SG Balan  |  First Published Jun 4, 2024, 8:14 AM IST

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு கடுமையான போட்டி காணப்படுவதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.


நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த் தேர்தல் முடிவுகளின் போக்கைப் பொறுத்து பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், பங்குச்சந்தை எடுத்த எடுப்பிலேயே இறங்குமுகமாகத் தொடங்கியுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு கடுமையான போட்டி காணப்படுவதன் எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. உ.பி.யில் வாரணாசி தொகுதியில் மோடி 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் முன்னிலையில் இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 2,681.23 புள்ளிகள் சரிந்து 3.51 சதவீதம் வீழ்ச்சியுடன் 73787.55 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி -847.90 புள்ளிகள் குறைந்து 3.64 சதவீதம் சரிவுடன் 22416.00 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்ற வருகிறது.

ஏற்கெனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. இதன் எதிரொலியாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி இரண்டு உயர்வைச் சந்தித்தன. சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய உச்சத்தை எட்டின.

எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியான ஜூன் 1ஆம் தேதி வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் போக்கு நாள் முழுவதும் தொடர்ந்து வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2038.75  புள்ளிகள் உயர்ந்து 76,000.06 புள்ளிகளில் முடிந்தது. நிஃப்டி 620.80 புள்ளிகள் உயர்ந்து 23,151.50 புள்ளிகளில் நிறைவு கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான 83.46 ஆக இருந்தது.

Lok Sabha Elections: மோடியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா இண்டியா கூட்டணி?

கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவையும், தடுமாற்றத்தையும் சந்தித்த நிலையில், தேர்தலை முன்னிட்டு சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது போல பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனும்போது பங்குச்சந்தைகளில் ஏறுமுகத்தைப் பார்க்கலாம். ஆட்சி மாற்றம் நடைபெறும்போது தற்போது உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மாறலாம் என்பதால் அது பங்கு வர்த்தகத்தில் சரிவை ஏற்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்க உள்ளது. வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவில் உலக சாதனை: எழுந்து நின்று கைதட்டிய தேர்தல் ஆணையர்கள்!

click me!