சில நிமிடங்களில் 20 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ், நிஃப்டி பங்குச்சந்தையில் மாபெரும் வீழ்ச்சி!

By SG Balan  |  First Published Jun 4, 2024, 10:43 AM IST

​​காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2.16% சரிவுடன் 1,654 புள்ளிகள் குறைந்து 74,814 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. அதேசமயம், நிஃப்டி 509 புள்ளிகள் குறைந்து 1.19% வீழ்ச்சியுடன் 22,754 ஆக வர்த்தகமானது.


நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடுமையான போட்டி காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை சந்தைகள் தொடக்கத்தில் வியத்தகு அளவு மோசமடைந்தன. சென்செக்ஸ் 1,708.54 புள்ளிகள் அல்லது 2.23% குறைந்து 74,760.24 ஆகவும், நிஃப்டி 488.55 புள்ளிகள் அல்லது 2.1% குறைந்து 22,775.35 ஆகவும் இருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

​​காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2.16% சரிவுடன் 1,654 புள்ளிகள் குறைந்து 74,814 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. அதேசமயம், நிஃப்டி 509 புள்ளிகள் குறைந்து 1.19% வீழ்ச்சியுடன் 22,754 ஆக வர்த்தகமானது. வர்த்தகம் தொடங்கிய முதல் 20 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்கள் சுமார் ரூ.20 லட்சம் கோடியை விற்பனை செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணிநேரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு கடுமையான போட்டி காணப்படுவதன் எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. உ.பி.யில் வாரணாசி தொகுதியில் மோடி 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் முன்னிலையில் இருக்கிறார்.

Modi vs Ajay Rai: வாரணாசியில் மோடிக்குப் பின்னடைவு! உ.பி.யில் பாஜகவை அடிச்சுத் தூக்கும் இந்தியா கூட்டணி!

முன்னதாக, எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியான ஜூன் 1ஆம் தேதி வர்த்தக தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்ததால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் போக்கு நாள் முழுவதும் தொடர்ந்து வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2038.75  புள்ளிகள் உயர்ந்து 76,000.06 புள்ளிகளில் முடிந்தது. நிஃப்டி 620.80 புள்ளிகள் உயர்ந்து 23,151.50 புள்ளிகளில் நிறைவு கண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான 83.46 ஆக இருந்தது.

பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனும்போது பங்குச்சந்தைகளில் ஏறுமுகத்தைப் பார்க்கலாம். ஆட்சி மாற்றம் நடைபெறும்போது தற்போது உள்ள பொருளாதாரக் கொள்கைகள் மாறலாம் என்பதால் அது பங்கு வர்த்தகத்தில் சரிவை ஏற்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுக்க உள்ளது. வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: அடுத்த பிரதமர் யார்? தமிழகத்தில் மக்கள் தீர்ப்பு யாருக்கு சாதகம்?

click me!