ஜூலை மாதம் 12 வங்கி விடுமுறை நாட்கள் வருகின்றன. வங்கி விடுமுறை நாளிலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கிச் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜூலை மாதத்தில் பல நாட்கள் வங்களுக்கு விடுமுறை வரவுள்ளது. இதனால், வங்கி ஊழியர்கள் உற்சாகம் அடைந்தாலும் வங்கி சேவைகளை நம்பி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்கள் வங்கிக்குச் செல்வதற்கு முன் இந்த விடுமுறைகளை கவனத்தில் கொள்வது அவசியம்.
ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை நாட்களின்படி, ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை மாதம் நெருங்கி வருவதால், அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜூலை மாதம் 12 வங்கி விடுமுறை நாட்கள் வருகின்றன.
போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ரூ.5,000 மட்டும் முதலீடு பண்ணுங்க! சொளையா 3.5 லட்சம் கிடைக்கும்!
ஜூலை 3, 2024: ஷில்லாங்கில் உள்ளூர் பண்டிகை கொண்டாடப்படுவதால் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 6, 2024: ஐஸ்வாலில் MHIP தினத்திற்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 7, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 8, 2024: இம்பாலில் காங் ரதஜாத்ராவை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 9, 2024: காங்டாக்கில் நடைபெறும் உள்ளூர் பண்டிகைக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 13, 2024: 2வது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 14, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 16, 2024: டேராடூனில் உள்ள வங்கிகள் ஹரேலா விடுமுறையை முன்னிட்டு மூடப்படும்.
ஜூலை 17, 2024: மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. இருப்பினும், பனாஜி, திருவனந்தபுரம், கொச்சி, கோஹிமா, இட்டாநகர், இம்பால், டேராடூன், காங்டாக், கவுகாத்தி, சண்டிகர், புவனேஸ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் சில வங்கிகள் செயல்படும்.
ஜூலை 21, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
ஜூலை 27, 2024: 4வது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் விடுமுறை.
ஜூலை 28, 2024: ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
வங்கி விடுமுறைகள் மாநிலங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். இந்திய ரிசர்வ் வங்கி அட்டவணையின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாநில வாரியான விடுமுறை நாட்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
வங்கி விடுமுறை நாளிலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கிச் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலான வங்கிச் சேவைகள் ஆன்லைனில் கிடைப்பதால், அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். வங்கி விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேங்கிங் வசதியை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?