மேதாந்தா மருத்துவமனையின் குளோபல் ஹெல்த் லிமிடட் நிறுவனம், ரூ.2,250 கோடி முதலீடு திரட்டுவதற்காக பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டுள்ளது.
மேதாந்தா மருத்துவமனையின் குளோபல் ஹெல்த் லிமிடட் நிறுவனம், ரூ.2,250 கோடி முதலீடு திரட்டுவதற்காக பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டுள்ளது.
மேதாந்தா மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்று ரூ.1,750 கோடியும், புதிதாக ரூ.500 கோடிக்கு பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
புதுடெல்லியைச் சேர்ந்த மேதாந்தா மருத்துவமனையின் சந்தை மதிப்பு ரூ.9ஆயிரம் கோடியாகும். ஒரு செட் பங்கின் மதிப்பு ரூ.319 முதல் ரூ.336 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேதாந்தாவின் ஐபிஓ நேற்று தொடங்கிய நிலையில்வரும் 7ம் தேதி வரை நீடிக்கிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ தோல்வி:மத்திய அரசுக்கு விளக்கமளிக்கிறார்சக்திகாந்த தாஸ்
ஐபிஓ விற்பனையில் 35 சதவீதத்தை சில்லரை வர்த்தகர்களுக்கும், 50சதவீதத்தை தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதத்தை நிறுவனமில்லாத வாங்குவோருக்கும் ஒதுக்கியுள்ளது.
பங்கு வெளியிட்டில் முதல்நாளான நேற்று ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.662 கோடி கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனை விலையிலிருந்து கூடுதலாக 19 ரூபாய் கிரே மார்க்கெட் விலையில் விற்கப்படுகிறது.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்
மேதாந்தாவின் குளோபல் ஹெல்த் லிமிடட் பங்கு விற்பனை முடிந்தபின், நவம்பர் 16ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது. இந்த ஐபிஓவில் மொத்தம் 5.08 கோடி பங்குகளை விற்பனை செய்ய மேதாந்தா திட்டமிட்டுள்ளது.
மேதாந்தா மருத்துவமனையை இதயம் மற்றும் இதயம் தொடர்பான மருத்துவர் நரேஷ் டெஹ்ரான் என்பவர் தொடங்கினார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பல்வேறு பன்முக சிகிச்சை சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன. குறிப்பாக குருகிராம், இந்தூர், ராஞ்சி, லக்னோ, பாட்னாவில் மேதாந்தா மருத்துவமனைகள்
கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி மேதாந்தா மருத்துவமனை 30 சிறப்பு மருத்துவமனைகளுக்கு தனது சேவையை வழங்குகிறது. இந்த மருத்துவமனையில் நேரடியாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், 1300 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள், 2467 படுக்கைகள் உள்ளன.
லக்னோ, பாட்னாவில் உள்ள இரு மேதாந்தா மருத்துவமனைகளும் சமீபத்தில் தொடங்கப்பட்டன. ஆனால், மற்ற 3 மருத்துவமனைகளும் நன்கு வளர்ந்த மருத்துவமனைகள், ஏராளமான நவீன வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளன.
ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஏன் பணவீக்கம் குறி்த்து விளக்க அறிக்கை அனுப்பியது? ஓர் அலசல்
நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சேவைசெய்யும் ஹோம் கேர் சர்வீஸையும் மேதாந்தா மருத்துவமனை வழங்குகிறது. ரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், செவிலியர் சேவை போன்றவற்றையும் வழங்குகிறது குறிப்பிடத்தக்கது