இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தியின் வாரிசான அக்ஷதா மூர்த்தி கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் பிறந்தார்
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் பிரிட்டனின் பணக்காரர தம்பதிகளில் ஒருவர். சண்டே டைம்ஸ் UK பணக்காரர்கள் பட்டியலின்படி, கடந்த ஆண்டு அவர்களின் நிகர மதிப்பு 837 மில்லியன் டாலர்கள் (ரூ. 6912 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக், பிரிட்டன் பிரதமராக உள்ளார். மறுபுறம், அக்ஷதா மூர்த்தி இந்தியாவின் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனர், இந்திய கோடீஸ்வரர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.
யார் இந்த அக்ஷதா மூர்த்தி?
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தியின் வாரிசான அக்ஷதா மூர்த்தி கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் பிறந்தார். இன்ஃபோசிஸின் தலைமையகமான பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டிலும் இரண்டு மேஜர்களை முடித்துள்ளார்.
பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில் பேஷன் டிசைனிங் பட்டம் பெற்றார். பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்த ஸ்டான்போர்டில் அக்ஷதா சுனக்கை சந்தித்தார். 2009 இல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பெரும் ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்துள்ளனர். இவர்களுக்கு கென்சிங்டனில் சொந்த வீடு உள்ளது. சொத்தின் விலை ரூ.71 கோடி. அவர்களுக்கும் அங்கே ஒரு பிளாட் இருக்கிறது. அவர்களுக்கு கலிபோர்னியாவில் ஒரு பென்ட்ஹவுஸ் மற்றும் யார்க்ஷயரில் ஒரு மாளிகை உள்ளது.
ரூ.123 கோடி நன்கொடை அளித்த பெரும்பணக்காரரின் மகள்.. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
சுனக்கின் தாய் மருந்தாளுனர், அவரது தந்தை ஒரு மருத்துவர். அக்ஷதா மூர்த்தியின் தாயார் சுதா மூர்த்தி ஒரு நாவலாசிரியர், பொறியாளர், பெண்ணியவாதி மற்றும் தொண்டு செய்பவர். அக்ஷதா டிசைன்ஸ் என்ற ஃபேஷன் நிறுவனத்தை அக்ஷதா மூர்த்தி வைத்திருக்கிறார். அவர் தொலைதூர கிராமங்களில் உள்ள கைவினைஞர்களுடன் இணைத்து ஆடைகளை உருவாக்குகிறார்.
பிரிட்டிஷ் பிராண்ட் நியூ மற்றும் லிங்வுட்டின் இயக்குநராகவும், சுனக் மற்றும் அக்ஷதா ஆகியோரால் நிறுவப்பட்ட கேடமரன் வென்ச்சர்ஸ் UK இன் இயக்குநராகவும் அக்ஷதா மூர்த்தி உள்ளார். இந்த பணக்கார தம்பதிகென்சிங்டனில் 7 மில்லியன் பவுண்டு வீடு, 1.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள யார்க்ஷயரில் ஒரு மாளிகை மற்றும் சாண்டா மோனிகாவில் ஒரு பென்ட் ஹவுஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.
1980 இல் பெங்களூருக்கு அருகில் பிறந்த திருமதி மூர்த்தியின் பெற்றோர் என்.ஆர். நாராயணனும் சுதாவும் இன்ஃபோசிஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினர். அவரது தந்தை 1981 முதல் 2002 வரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய பேரரசாக அதை உருவாக்கினார். அவர் ‘இந்தியாவின் பில் கேட்ஸ்’ என்று அழைக்கப்பட்டார். நாராயண மூர்த்தியின் சொத்து மதிப்பு சொத்து 35,500 கோடி ஆகும்.
இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அக்ஷதா மூர்த்தி 0.93 சதவீத பங்குகளை வைத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஈவுத்தொகையை அக்ஷதா பெறுகிறார். சுனக் ஒரு பிரிட்டிஷ் குடிமகன். இருப்பினும், அக்ஷதா தனது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. பல ஐரோப்பிய நாடுகளைப் போல இரட்டைக் குடியுரிமையை இந்தியா அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.