இன்போசிஸ் விளம்பரத் தூதராக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஒப்பந்தம்!

By SG Balan  |  First Published Aug 24, 2023, 6:37 PM IST

டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால் இப்போது பெங்களூருவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸின் பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால் இப்போது பெங்களூருவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான இன்ஃபோசிஸின் பிராண்ட் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளார். இது குறித்து ரபேல் நடாலே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"அனைவருக்கும் வணக்கம். இன்போசிஸ் குழுமத்தின் உலகளாவிய பிராண்ட் தூதராக சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்போசிஸ் அதன் டிஜிட்டல் நிபுணத்துவத்தை உலகளாவிய டென்னிஸ் களத்திலும் அதற்கு அப்பால் உள்ள சமூகத்திலும் தாக்கத்தைக் கொண்டு வந்துள்ளது" என்று நடால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு பக்கத்திலேயே தூங்காதீங்க! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை!

Hello everyone. Very excited to join Team as their global brand ambassador. Infosys has brought its digital expertise to the global tennis ecosystem and love impact that Infosys is making to communities beyond the court. I am looking forward to this partnership to do… pic.twitter.com/vf8wcV5ixp

— Rafa Nadal (@RafaelNadal)

இன்போசிஸ் நிறுவனம் வியாழன் அன்று டென்னிஸ் சூப்பர் ஸ்டாரான ரபேல் நடாலுடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை அறிவித்தது. "உலக அளவில் டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர், பல ஆண்டுகளாக ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். நடால், தனிநபர்களோ, வணிகத் தலைவர்களோ தங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னேறுவது எப்படி என்பதற்கு சரியான உருவகம் ஆகும்" என்று இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

நிம்மதியா வாழ விடுங்க... விமான நிலையத்தில் அஜித்துக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு வசமான டோஸ்!

 
click me!