முதலீடு என்பது ஒரு மனிதனின் இரண்டாம் வருமானம் என்று அழைப்பார்கள், முதலீடு என்பது இல்லை என்றால் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இறுதி நிமிடம் வரை உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று பல அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. சரி இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது எந்த அளவில் லாபம் தரும்? இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது டாலருக்கு நிகரான நமது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கான சில அறிகுறிகள் தெரிவதாலும் மற்றும் இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதாலும், முதலீட்டாளர்கள் (முதலீடு செய்ய விரும்புபவர்கள்) தங்கத்தின் சீரான போக்கைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
எல்கேபி செக்யூரிட்டிஸின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி குழு) ஜதீன் திரிவேதி பேசுகையில், “இந்தியாவில் நெருங்கி வரும் பண்டிகை காலங்கள், தங்கத்தின் விலையை நிலையான ஒரு நிலையில் வைத்திருக்கும், ஆகவே தங்கத்தை குவிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஒரு சிறந்த தருணமாக அதன் விலை ரூ.58,500 மற்றும் ரூ.57,000 இடையே உள்ளது என்று அவர் கூறினார்.
அதே போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைவதற்கான சில அறிகுறிகள் தென்படுவதாலும் மற்றும் முன்பு கூறியதைப்போல இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தின் நிலையான இந்த சூழலை மிகசிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பழைய ஓய்வூதிய திட்டம்.. ஊழியர்களுக்கு விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்.. என்ன தெரியுமா?
நேற்று ஆகஸ்ட் 23 புதன்கிழமை, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.59,230 ஆக இருந்தது, அதே போல கடந்த செவ்வாய்க்கிழமை அது ரூ.59,130 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 83.1 ஆக சரிந்தது. அதே போல இந்த வாரம் செவ்வாய்கிழமையன்று, ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவில் இருந்து மீண்டு, அமெரிக்க டாலருக்கு எதிராக 14 பைசா உயர்ந்து 82.99 ஆக இருந்தது. ஒவ்வொரு முறையும் ரூபாயின் மதிப்பு குறைந்தால், தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. மேலும் உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கின்றது என்பதும் குறிபிடத்தக்கது.
மேலும் திரிவேதி கூறுகையில், “உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கத்தை கையகப்படுத்தும் தற்போதைய போக்கு மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு, வலுவான டாலர் தாக்கம் மற்றும் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் காரணமாக தங்கத்தின் விலை கணிசமாக உயரவில்லை என்றால், அது நிலையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த சூழலில் விரைவாக மாறக்கூடும், அதாவது அமெரிக்க பெடரல் ரிசர்வ், அதன் விகித உயர்வுகளில் ஒரு இடைநிறுத்தம் அல்லது வட்டி விகிதக் குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுட்டிக்காட்டும் தருணத்தில், தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது."
ஆகவே இந்தக் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான நம்பிக்கையான கண்ணோட்டத்தை நியாயமான முறையில் முன்னிறுத்தலாம். இதன் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.61,000 முதல் ரூ.62,000 வரை இருக்கும். "ஆகவே தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது மிகசிறந்த நடவடிக்கையாகும் என்றார் அவர்.
கடந்த ஜூலை 2018 முதல் கடந்த 5 ஆண்டுகளில் தங்கம் 99 சதவீத விலை உயர் அடைந்துள்ளது, மறுபுறம், இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 77 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், 2017 இல் ஒரு டாலருக்கு 63 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு தற்போது 31 சதவீதம் குறைந்து ஒரு டாலருக்கு 82 ஆக இருந்தது என்றார் அவர்.
“சந்தையில் இன்னும் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது. பொருளாதார குறியீடுகள் பல, சீனா பலவீனமடைந்து வருவதை காட்டுகிறது. இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக உள்ளது. ஆகவே முதலீட்டாளர்கள் சுமார் 20 சதவீத முதலீட்டுத் தொகையை தங்கத்தில் வைத்துக்கொள்ளலாம்" என்று ஜதீன் திரிவேதி கூறுகிறார்.
Allowance Hike : முதல்வரின் முக்கிய அறிவிப்பு.. இவர்களுக்கு உதவித்தொகை உயர்வு - முழு விபரம் இதோ !!