ஏர் ஏசியா விமானத்தை கையகப்படுத்த ஏர் இந்தியா திட்டம்: சிசிஐ அமைப்பிடம் அனுமதி கோரியது

Published : Apr 27, 2022, 02:23 PM ISTUpdated : Apr 27, 2022, 04:30 PM IST
ஏர் ஏசியா விமானத்தை கையகப்படுத்த ஏர் இந்தியா திட்டம்: சிசிஐ அமைப்பிடம் அனுமதி கோரியது

சுருக்கம்

airasia air india : டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதற்காக இந்திய போட்டி ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதற்காக இந்திய போட்டி ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.

ஏர் ஏசியா இந்தியா நிறுவநம் என்று டாடா சன்ஸ்பிரைவேட் லிமிட் மற்றும் மலேசியா ஏர்ஏசியா குழுமம் இணைந்து நடத்தி வருகின்றன. இதில் ஏர்ஏசியாவில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 83.67 சதவீத பங்குகள் உள்ளன. மீதமுள்ள பங்குகள் மலேசியாவின் ஏர்ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிட் நிறுவனத்திடம் இருக்கிறது.

இதற்கிடையே டாடா குழுமம், சிங்கப்பூர்ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா விமானச் சேவையை வழங்கி வருகிறது. அனைத்து விமானச் சேவைகளையும் ஒருங்கிணைக்கவே டாடா குழுமம் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். 

இந்திய போட்டி ஆணையத்தில்(சிசிஐ) டாடா குழுமம் தாக்கல் செய்த மனுவில் “ டாடா குழுமத்தால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் ஏர்ஏசியா தனியார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் கையகப்படுத்தி ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க இருக்கிறோம்”எ னத் தெரிவித்துள்ளது.

ஏர்ஏசியா நிறுவனத்தில் 83 சதவீதப் பங்குகளை டாடா குழுமத்தின் துணை நிறுவனத்திடம் இருந்தாலும், அதைஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க, சிசிஐ ஒப்புதல் அவசியம். கடந்த 2014ம் ஆண்டுஜூன் மாதம் தொடங்கப்பட்ட ஏர்ஏசியா நிறுவனம் பயணிகள் சேவை, சரக்குப் போக்குவரத்து, தனிநபர்வாடகை விமானம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் விமானச் சேவையை வழங்கவில்லை.

டாடா குழுமம்கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் வென்றது. ஏறக்குறைய ரூ.18ஆயிரம் கோடிக்கு , ரூ2,700 கோடி ரொக்கத்தையும்  அளித்து இரு நிறுவனங்களையும் டாடா குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்