pm narendra modi : pm modi news: 2022ம் ஆண்டில் முதல் பயணம்! பிரதமர் மோடி ஜெர்மன், டென்மார்க், பிரான்ஸ் பயணம்

By Pothy Raj  |  First Published Apr 27, 2022, 1:14 PM IST

pm narendra modi : pm modi news : 2022ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு பயணம் செல்ல உள்ளார். மே 2 முதல் 4ம்தேதிவரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.


2022ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு பயணம் செல்ல உள்ளார். மே 2 முதல் 4ம்தேதிவரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

2019ம் ஆண்டுக்குப்பின்

Tap to resize

Latest Videos

கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் கொரோனா காரணமாக எந்த நாட்டுக்கும் பயணிக்காமல் பிரதமர் இருந்தார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அதன்பின் 2022ம் ஆண்டு பிறந்ததில் இருந்து எந்த நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணிக்காத நிலையில் முதல்முறையாக செல்ல உள்ளார்.

கோபஹென் நகரில் நடக்கும் இந்தியா-நார்டிக் மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஒலப் ஸ்காலஸ்,  பிரான்ஸ் அதிபர் இமானுல் மெக்ரான் ஆகியோரைச் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். பிரான்ஸுக்கு கடைசியாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி சென்றிருந்தார். அதன்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் இப்போது செல்ல உள்ளார்.

ஜெர்மனி பயணம்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக மே 2 முதல் 4ம் தேதிவரை ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் செல்கிறார். 2022ம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.

முதலில் ஜெர்மன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஒலப் ஸ்காலஸை சந்தித்துப் பேசஉள்ளார். ஜெர்மனியில்புதிய அரசாங்கம் அமைந்தபின் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். ஜெர்மனியில் வாழும் இந்தியர்கள்மத்தியிலும் பிரதமர் மோடி பேச உள்ளார். 

நார்டிக் மாநாடு

அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் மோடி டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பிரதமர் மெட்டி பிரடெரிக்ஸனைச் கோப்பகெந் நகரில் சந்தித்து மோடி உள்ளார். டென்மார்க் நடக்கும் 2-வது இந்தியா-நார்டிக் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

இந்தியா-டென்மார்க் வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசும் பிரதமர் மோடி, டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்தும் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்தியா-டென்மார்க் நார்டிக் மாநாட்டில் ஐஸ்லாந்து பிரதமர் கேத்தரின் ஜேக்கப், நார்வே பிரதமர் ஜோனாஸ், ஸ்வீடன் பிரதமர் மெக்டலனா ஆன்டர்ஸன்,  பின்லாந்து பிரதமர் சானா மரின் ஆகியோரைச் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

75 வது ஆண்டு விழா

அங்கிருந்து நாடு திரும்பும்போது, பாரிஸ் நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்தியா, பிரான்ஸ் இடையிலான 75 ஆண்டு தூதரக உறவைக் கொண்டாடும் வகையில் அதிபர் இமானுல் மெக்ரானைச் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார். அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர்மோடி தாயகம் திரும்புகிறார்

click me!