lic ipo date price:வாங்கக்கூடிய விலையில்தான் எல்ஐசி பங்கு: விலை தெரிஞ்சுக்குங்க? பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி

By Pothy RajFirst Published Apr 27, 2022, 11:04 AM IST
Highlights

lic ipo date price : எல்ஐசி ஐபிஓ வரும் மே மாதம் முதலீ்ட்டாளர்களுக்கும், 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மக்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ஐசி ஐபிஓ வரும் மே மாதம் முதலீ்ட்டாளர்களுக்கும், 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மக்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.5 % பங்குகள்

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளில் 5 சதவீதத்தை மட்டும் விற்று முதலீடு திரட்ட நினைத்தது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத அதிகரிப்பு எதிர்பார்ப்பு போன்றவற்றால் அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாமல் போய்விடுவார்கள் என்று கருதியது

இதையடுத்து மத்திய அரசு 3.5 சதவீத பங்குகள், அதாவது 22.13 கோடி பங்குகளை மட்டும் விற்று ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு திரட்ட முடிவு செய்துள்ளது. பொதுவாக ஐபிஓவில் பங்குகளை விற்றால், 5 சதவீதத்துக்கும் குறைவில்லாமல் விற்க வேண்டும், ஆனால், மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்காக 3.5 சதவீதத்துக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

பங்குவிலை  என்ன

இந்நிலையில் எல்ஐசி ஐபிஓ எப்போது இருக்கும், ஒரு பங்கின் விலை, தள்ளுபடி போன்றவற்றை முடிவு செய்ய எல்ஐசி நிறுவனத்தின் வாரியக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எல்ஐசியின் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 வரை தள்ளுபடியும், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.40 தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தவிர பங்குகளை வாங்குவோர்களுக்கும் தனியாகத் தள்ளுபடி தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக எல்ஐசி வட்டாரங்கள் தெரிவித்தின.

பாலிசிதாரர்கள்

எல்ஐசி நிறுவனத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓவுக்கு அனைத்துவிதமான ஒப்புதல்களும் கிடைத்துவிட்டன. இனிமேல் ஐபிஓவுக்கு தயாராக இருக்க வேண்டும். பாலிசிதாரர்கள்தான் எல்ஐசி நிறுவனத்துக்கு முக்கியம். அவர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தள்ளுபடியும் தரப்படுகிறது. பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் தங்களின் பாலிசியை, பான் எண்ணோடு இணைக்க வேண்டும். டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

10 சதவீதம் பாலிசிதார்ரகள்

எல்ஐசி பங்குகளில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதாவது 2.21 கோடி பங்குகளும், 15 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று எல்ஐசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள 50 சதவீதப் பங்குகள் அனைத்தும் தகுதியான முதலீட்டாளர்களுக்கும் 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் 15 சதவீதம் நிறுவனமில்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது. இதில் மே 2ம் தேதி முதலீட்டாளர்களுக்கும், மே 4ம் தேதி முதல் 9ம் தேதிவரை மக்களுக்கும் ஐபிஓ விற்பனை நடக்கும். இதற்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகலாம்

click me!