
ஏஐ வேர்ல்டு ஸ்கூல் (AI World School) மாணவர்களை உலகின் பல பிரச்னைகளால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான தீர்வை வழங்குபவர்களாகவும், பூமியின் எதிர்காலத்தை வடிவமைக்க வல்லவர்களாகவும் உருவாக்குகிறது. நிஜவுலகின் பிரச்னைகளுக்கு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் விதம் வியப்பளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் மூலம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான சில தீர்வுகளை மாணவர்கள் முன்வைக்கின்றனர். அதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச போட்டியில் உலகளவில் 32 நாடுகளை சேர்ந்த 4000க்கும் அதிகமானோர் பதிவு செய்து கலந்துகொண்டனர். கொரோனா பிரச்னைகளுக்கு, 3 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பல புதுமையான தீர்வுகளை கொடுத்தனர்.
அனைத்து மாணவர்களுமே மிகச்சிறப்பாக புதுமைகளை செய்திருந்தனர். எனவே நடுவர்களுக்கு வெற்றியாளர்களை தீர்மானிப்பதே மிகவும் கடினமாக இருந்தது.
சர்வதேச தரம் வாய்ந்த நடுவர் குழு தான் முடிவுகளை எடுத்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டெம் ரோபோடிக்ஸ் ப்ராடக்ட்ஸ், ஃபிரோ ப்ராடக்ட்ஸ், மெய்நிகர் ஓட்டுநர் இல்லா கார் கோர்ஸ் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய ஏஐ ஸ்கூல் ஆஃப் இந்தியா பள்ளியின் தலைவர் ரமணா பிரசாத், ”கொரோனா பெருந்தொற்றால் உலகமே பெரும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், இந்த பெருந்தொற்றிலிருந்து உலகை காக்கும் முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் தியரிடிக்கலாகவே இருக்கிறது கல்வி. எனவே எதார்த்தத்தையும், மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும் புரிந்துகொள்ளும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும், ஏஐ ஸ்கூல் ஆஃப் இந்தியா இந்த முயற்சியை முன்னெடுத்தது. ஆரம்பத்தில் இந்த முயற்சி எந்தளவிற்கு ரீச் ஆகும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அதிகமானோர் கலந்துகொண்டது எங்களை(ஏஐ பள்ளி) ஊக்கமும் உற்சாகமும் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.