தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சரிந்தநிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சரிந்தநிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,335ஆகவும், சவரன், ரூ.42,680ஆகவும் இருந்தது.
தங்கம் விலையால் இன்ப அதிர்ச்சி! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,350 சரிந்தது: வெள்ளி ரூ1,800 வீழ்ச்சி
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து ரூ.5,365ஆகவும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 920 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,365க்கு விற்கப்படுகிறது.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் தங்கத்துக்கு வரிவிதிக்கப்படுகிறது என்ற அறிவிப்பால் தங்கம் விலை வேகமாக அதிகரித்து வரலாற்றில் இல்லாத அளவாக சவரன் ரூ.44 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், தங்கத்துக்கு வரி குறித்த புரிதல் ஏற்பட்டபின் தங்கம்விலை குறையத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.1350வரை குறைந்தது. ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை வரலாற்று உச்சம் ! சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது: மிடில் கிளாஸ் மக்கள் கலக்கம்
வெள்ளி விலையில் இன்று வீழ்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.72.20 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.74.00ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.74,000 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.