Stock Market Today: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி மந்தம்! அதானி பங்கு வீழ்ச்சி

By Pothy RajFirst Published Feb 6, 2023, 9:45 AM IST
Highlights

Stock Market Today:வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி மந்தமாகத் தொடங்கியுள்ளன.

Stock Market Today:வாரத்தின் முதல்நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ், நிப்டி மந்தமாகத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரத்தில் 5 நாட்களும் கடும் ஊசலாட்டத்தில்பங்குச்சந்தை இருந்தாலும் உயர்வுடனே முடிந்தது முதலீட்டாளர்களுக்குஉற்சாகத்தை அளித்தது. ஆனால், இந்த வாரம் தொடக்கம் சரிவுடன் தொடங்கியுள்ளன.

பங்குச்சந்தை| சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஏற்றம்! சரிவிலிருந்து மீண்ட அதானி பங்குகள்

அமெரிக்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் சரிவுடன் முடிந்தது. உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவது, அமெரிக்காவிலும் மந்தநிலை இருப்பதால், பெடரல் ரிசர்வ் அடுத்துவரும் கூட்டத்திலும் வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. இதனால் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.

இந்தியப் பங்குச்சந்தையிலும் இந்த தாக்கம்காலை முதல் இருந்ததால் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. வரும் புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நடக்க இருப்பதால் வட்டிவீத உயர்வு குறித்து முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

ரிசர்வ் வங்கி குறைந்தபட்சம் 25 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தலாம் எனத் தெரிகிறது. பணவீக்கம்கட்டுக்குள் வந்தாலும் 25 புள்ளிகள் வட்டியை உயர்த்துவது பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க உதவும். இதனால் இன்று வர்த்தகத்தின் இடையே கடும் ஊசலாட்டத்தை காணலாம்.

எஸ்பிஐ பங்கு விலை உயர்வு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களும் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. முதலீட்டாளர்கள் லாபநோக்கில் செயல்பட்டு பங்குகளை விற்றால் சரிவு தொடரும் இல்லாவிட்டால் வர்தத்கத்தின் இடையே சந்தையில் ஏற்றம் இருக்கும்.

இன்று காலை வர்த்தகத்தில் அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் விலை சரிந்துள்ளன. குறிப்பாக அதானி போர்ட் மற்றும் பொருளாதார மண்டலப் பங்கு மட்டுமே உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது.

அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை அமெரிக்கப் பங்குச்சந்தையிலிருந்து நீக்குகிறது டோவ் ஜோன்ஸ்(S&P Dow Jones)

மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 255 புள்ளிகள் சரிந்து, 60,585 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 92 புள்ளிகள் குறைந்து, 17,761 புள்ளிகள் குறைந்தநிலையில் வர்த்தகம் நடக்கிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 8நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் உள்ளன, மற்ற 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.

நிப்டியில் ஐடிசி, எஸ்பிஐ, ஹீரோமோட்டார்ஸ், டாடா கன்சூமர், இன்டஸ்இன்ட் வங்கிப் பங்குகள் லாபத்தில் உள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ், டிவிஸ் லேப்ஸ், எஸ்பிஐ இன்சூரன்ஸ், இன்போசிஸ், எச்யுஎல் பங்குகள் வீழ்ச்சியில் உள்ளன. 

நிப்டியில் பொதுத்துறை வங்கி, ஊடகம்,வங்கி, எப்எம்சிஜி ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் உள்ளன. உலோகம், மருந்துத்துறை, ஐடி, கட்டுமானம், ஆட்டோமொபைல் துறை பங்குகள் சரிவில் உள்ளன.
 

click me!