புதிய வருமானவரி முறையால் வரிசெலுத்துவோருக்கு பாதிப்பு: ஆர்எஸ்எஸ் ஆதரவு எஸ்ஜேஎம்(SJM) எதிர்ப்பு

By Pothy RajFirst Published Feb 4, 2023, 5:12 PM IST
Highlights

புதிய வருமானவரி முறை வரி செலுத்தும் பிரிவினருக்கு ரிட்டன் தாக்கல் செய்வதில் வேண்டுமென்றால் எளிமையைத் தரலாம், ஆனால், சேமிப்பு பழக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆர்எஸ்எஸ் ஆதரவு ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச்(எஸ்ஜேஎம்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

புதிய வருமானவரி முறை வரி செலுத்தும் பிரிவினருக்கு ரிட்டன் தாக்கல் செய்வதில் வேண்டுமென்றால் எளிமையைத் தரலாம், ஆனால், சேமிப்பு பழக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆர்எஸ்எஸ் ஆதரவு ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச்(எஸ்ஜேஎம்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, மாத வருமானம் ஈட்டுவோருக்கு புதியசலுகைகளை அறிவித்தார். இதன்படி  வருமானவரி உச்சரவரம்பு விலக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது, புதிய வருமானவரிமுறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம்வரை ஊதியம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிமுகம் செய்தார்.

கர்நாடக பாஜக எம்.பி.சொத்து 4,186% உயர்வு!10 ஆண்டுகளில் 71 எம்.பி.க்கள் சம்பாத்யம் 286% அதிகரிப்பு:ஏடிஆர் ஆய்வு

இந்த புதிய வருமானவரி முறைக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் இணைநிறுவனர் அஸ்வானி மகாஜன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது

நாங்கள் எதிர்பார்த்தைப் போலவே, நடுத்தரக் குடும்பத்தினரின் வருமாவரிச் சுமையையும், பெரிய பணக்காரர்களுக்கும் புதிய வருமானவரி முறை குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாயில் ரூ.37ஆயிரம் கோடி  பாதிப்பு ஏற்படும். 

குறைவான வரிமானவரியாலும், எளிதாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கும் புதிய வருமானவரி முறை உதவியாக இருக்கும். ஆனால், வருமானவரி செலுத்துவோரின் சேமிப்பில் புதிய வருமானவரி முறை எதிர்மறையான பாதிப்பைஏற்படுத்தும். நடுத்தர குடும்பத்தினரிடையே சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் வரிமுறையில் மாற்றத்தை மத்திய அ ரசு கொண்டுவர வேண்டும். 

மத்திய பட்ஜெட்-டில் சிறுபான்மை நலத்துறைக்கு 38% நிதி குறைப்பு: மதரஸாக்களுக்கு 93% குறைப்பு

மத்தியபட்ஜெட் வளர்ச்சி நோக்கத்தில் இருக்கிறது என்பதை வரவேற்கிறோம். ஆனால், இந்தியாவின் உற்பத்தியை ஊக்கும்விக்கும் வகையில் போதுமான அறிவிப்புகல் இல்லை என்று கருதுகிறோம்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகமான வரி விதித்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தி வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கும். இந்த பட்ஜெட்டில்உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், உற்பத்தியை ஊக்குவிக்கம் வகையில் சலுகைகள் இல்லாதது அதிருப்தியாக இருக்கிறது.

அரசின் கொள்கைக் கண்ணாடி என்பது அரசு செலவினங்களை எவ்வாறு என்பதைப் பொறுத்துதான்,அதுதான் பட்ஜெட்டில் பிரதிபலிக்கும். உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு, கல்வி, டிஜிட்டல்மயம் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது
வேளாண் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு வைத்திருப்பது வரவேற்கக்கூடியது. இது வேளாண்மை மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஊக்கப்படுத்தும்

இவ்வாறு மகாஜன் தெரிவித்துள்ளார்

click me!