Adani Hindenburg:இந்தியாவின் எதிர்காலம் அதானி-யின் திட்டமிட்ட கொள்ளையால் தடுக்கப்படுகிறது: ஹிண்டன்பர்க் பதிலடி

By Pothy RajFirst Published Jan 30, 2023, 11:56 AM IST
Highlights

இந்தியாவில் சக்திவாய்ந்த ஜனநாயகம் இருக்கிறது, வல்லரசாகும் சக்தி இருக்கிறது, சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அதானி குழுமத்தின் திட்டமிட்ட கொள்ளையால் அது தடுக்கப்படுகிறது. மோசடிகளை தேசியவாதத்தால் மறைக்க முடியாது என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவில் சக்திவாய்ந்த ஜனநாயகம் இருக்கிறது, வல்லரசாகும் சக்தி இருக்கிறது, சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அதானி குழுமத்தின் திட்டமிட்ட கொள்ளையால் அது தடுக்கப்படுகிறது. மோசடிகளை தேசியவாதத்தால் மறைக்க முடியாது என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. 

இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு:அதானி குழுமம் 413 பக்க பதிலடி

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அறி்க்கையால் அதானி குழுமம் சந்தை மதிப்பு 5000 கோடி டாலரை இழந்துள்ளது. அதானி மட்டும் 2000 கோடி டாலரை இழந்துள்ளார். அதாவது அவரின் சொத்துமதிப்பில் ஐந்தில் ஒருபகுதியை இழந்துள்ளார்.

இந்நிலையில் அதானி குழுமம் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் பதிலடி தரும் வகையில் 413 பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்துக்கு பதிலடி தரும் வகையில் ஹிண்டன்பர்க் நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவரால் மோசடி செய்யப்பட்டாலும், மோசடி என்பது ஒரு மோசடி என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம், ஒளிமயமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என நாங்கள் நம்புகிறோம். ஆனால், அதானி குழுமம் திட்டமிட்ட தனது கொள்ளையால், தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு செயல்படும் மோசடிகளால் இந்தியாவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

எல்ஐசி-க்கு ரூ.16,500 கோடி போச்சு!அதானி குழும பங்குகளில் முதலீடு எவ்வளவு தெரியுமா?

நாங்கள் அந்நியச் செலாவணி மற்றும் பரிமாற்றச் சட்டங்களை அப்பட்டமாக நாங்கள் மீறினோம் என்று அதானி குழுமம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதானி அத்தகைய சட்டங்களை அடையாளம் காணத் தவறிய போதிலும், நாங்கள் திட்டவட்டமாக மறுக்கும் மற்றொரு கடுமையான குற்றச்சாட்டு இதுவாகும்.
அதானி குழுமம் தனது முக்கியமான விஷயங்களில் கவனத்தை திசைதிருப்ப முயன்று வருகிறது,

தேசியவாதம் என்ற வார்த்தை பதத்தை கையில் எடுத்துள்ளது. அதானி குழுமத்தின் வேகமான, அசுரத்தனமான வளர்ச்சியையும், குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்துக்களையும் இந்தியாவின் வெற்றியாக நினைத்துக் கொண்டிருக்கிறது.இதை நாங்கள் அப்பட்டமாக மறுக்கிறோம்.

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு, திட்டமிட்ட கொள்ளையால் இந்தியாவின் வளர்ச்சியை அதானி குழுமம் தடுக்கிறது. எங்களின் 413 பக்க அறிக்கையில், 30 பக்கங்கள் இந்த குற்றச்சாட்டுக் குரியதாகும். 330 பக்கங்கள் நீதிமன்றத்தின் ஆவணங்கள்.53 பக்கங்கள் என்பது, உயர்மட்ட நிதிகள், பொதுத் தகவல்கள், பொருத்தமற்ற கார்ப்பேர்ட் விவரங்கள், பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவது குறித்து உள்ளன.

கெளதம் அதானி-க்கு குடைச்சல்! பங்கு விற்பனையை ஆய்வு செய்கிறது செபி(SEBI)?

நாங்கள் அதானி குழுமத்திடம் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. எங்கள் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கத் தவறிவிட்டது. 
எங்கள் குற்றச்சாட்டின் முக்கிய சாரம்சம் என்பது, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் பணப்பரிமாற்றத்தில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. அது முழுமையாக கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான்.

அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக அதானி குழுமத்துக்கு கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடாக வந்த மூலம் என்ன என்பது எங்கள் கேள்வியாகும். குறிப்பாக மொரியஷ் நாட்டில்இருந்து கோடிக்கணக்கான டாலர்கள் வினோத் அதானி நிறுவனத்தில் இருந்து முதலீடாக அதானி குழுமத்துக்கு வந்துள்ளது.

அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி! கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கி சொல்வது என்ன?

எங்கள் அறிக்கையில் அதானி குழுமம் செய்துள்ள ஏராளமான முறைகேடுகள், வெளிநாடுகளில் இருந்து வரப்பெற்ற சந்தேகத்துக்குரிய முதலீடுகள், அந்த முதலீடுகள் முழுமையாக தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். ஆனால் அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை எளிமையாக மறுத்துவிட்டது. 

இவ்வாறு ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது

click me!