
மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவுக்கான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிட்டது, ஒரு தலைவரையும் இரண்டு உறுப்பினர்களையும் நியமித்தது. ஆனால் இந்த முடிவு ஓய்வூதியம் பெறும் பல லட்சம் முன்னாள் ஊழியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
8வது ஊதியக் குழு
குறிப்பாக All India Defence Employees Federation (AIDEF) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம், 8வது ஊதியக் கமிஷன் - ToR-ல் 6.9 மில்லியன் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதியத் திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. AIDEF பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகள்-ல் அவசியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும். என்று கோரினார்.
ஓய்வுபெற்ற ஊழியர்கள்
இந்தக் கடிதத்தின் நகல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. 30–35 ஆண்டுகள் நாட்டுக்காக சேவை செய்த கோடிக்கணக்கான ஓய்வுபெற்ற ஊழியர்களை முழுமையாக புறக்கணிப்பது மிகப் பெரிய தவறாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7வது ஊதியக்குழு மற்றும் 8வதுக்குழு ஊதிய ToR-லில் மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. 8வது ஊதியக் குழுவில் தற்போதைய ToR-ல் ஊதிய அமைப்பு திறமையை ஈர்க்கும் வகையிலும், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என மட்டுமே கூறப்பட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் போன்ற அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ToR வேண்டுமென்றே மாற்ற வேண்டும் என AIDEF வலியுறுத்துகிறது. மேலும், நாடு முழுவதும் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டமான OPS-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் கோரிக்கையில் உள்ளனர். எனினும் 8வது சம்பள கமிஷன் ToR-ல் OPS பற்றி ஒரு வரியும் இல்லை. மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம், 6.9 மில்லியன் ஓய்வூதியர்கள் இந்த குழுவின் பரிசீலனைச் சுற்றிலும் இல்லை.
ஓய்வூதிய திருத்தம் ஒவ்வொரு ஓய்வுபெற்றவரின் உரிமை. வாழ்க்கையின் இறுதியில் அவர்களை புறக்கணிப்பது சரியல்ல என்று AIDEF கூறுகிறது. இதனால், 2026 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தத்தை ToR-ல் சேர்க்க வேண்டும் என்றும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் மீட்பு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 5% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் AIDEF வலியுறுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.