Share Market Today: லாபத்தை கொட்டி கொடுக்கும் 8 பங்குகள்.! இந்த விலைக்கு வந்தா லாக் பண்ணிடுங்க.!

Published : Nov 18, 2025, 10:23 AM IST
Share

சுருக்கம்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாயன்று, உலோகம், தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் லாபம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாரஸ் லேப்ஸ், நைகா, ஆர்பிஎல் பேங்க், உள்ளிட்ட 8 பங்குகள் லாபம் அளிக்கக்கூடும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதை இந்த விலையில் வாங்கலாம்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய் கிழமை சில குறைப்பிட்ட பங்குகள்  லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலோகம், தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனையும் தாண்டி 8 பங்குகள் லாபத்தை கொட்டிக்கொடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். 

லாரஸ் லேப்ஸ் (Laurus Labs) 

வாங்கும் விலை: ₹1,022 அருகில் 

இலக்கு: ₹1,094 

ஸ்டாப் லாஸ்: ₹986 

காரணம்: புதிய உச்சம் தொட்டு வலுவாக ஏறி வருகிறது. RSI 74-ல் இருப்பதால் இன்னும் ஏற வாய்ப்பு அதிகம். 

நிகா (Nykaa - FSN E-Commerce)

 வாங்கும் விலை: ₹268-₹270 

இலக்கு: ₹290 

ஸ்டாப் லாஸ்: ₹259 

காரணம்: வட்டமான அடித்தளம் (Rounding Bottom) உருவாகி வருகிறது. எல்லா மூவிங் ஆவரேஜ்களுக்கும் மேலே வர்த்தகம் நடக்கிறது. 

பிரமால் ஃபார்மா (Piramal Pharma) 

வாங்கும் விலை: ₹194-₹195 

இலக்கு: ₹204

ஸ்டாப் லாஸ்: ₹189

காரணம்: கீழிறங்கிய பிறகு திரும்ப ஏறும் அமைப்பு (Bullish Reversal). ₹189-க்கு கீழே போகவில்லை என்றால் நன்றாக ஏறும். 

ஆர்பிஎல் பேங்க் (RBL Bank) 

வாங்கும் விலை: ₹317 அருகில் 

இலக்கு: ₹335 

ஸ்டாப் லாஸ்: ₹310 

காரணம்: ₹310-க்கு மேல் நிலைத்தால் அடுத்தடுத்து ₹335 வரை எளிதாக போய்விடும். 

ஆஸ்ட்ரல் (Astral Ltd) 

வாங்கும் விலை: ₹1,465 அருகில் 

இலக்கு: ₹1,520 

ஸ்டாப் லாஸ்: ₹1,430 

காரணம்: கீழே இறங்கிய பிறகு மீண்டும் வலுவாக ஏறத் தொடங்கியுள்ளது. ₹1,430 ஆதரவு வலுவாக உள்ளது. 

பேடிஎம் 

வாங்கும் விலை: ₹1,330-₹1,335 

இலக்கு: ₹1,385 

ஸ்டாப் லாஸ்: ₹1,305 

காரணம்: அதிகம் இறங்கிய பிறகு நல்ல பச்சை மெழுகுவத்தி உருவாகியுள்ளது. RSI மேலே திரும்புகிறது. 

சுப்ரஜித் இன்ஜினியரிங் (Suprajit Engineering)

வாங்கும் விலை: ₹469-₹470 

இலக்கு: ₹495 

ஸ்டாப் லாஸ்: ₹460 

காரணம்: 200 நாள் சராசரியில் திரும்பி ஏறியுள்ளது. வால்யூம் அதிகரிப்புடன் வலுவான ஏற்றம்.

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) 

வாங்கும் விலை: ₹3,475 அருகில்

 இலக்கு: ₹3,600 

ஸ்டாப் லாஸ்: ₹3,420

 காரணம்: ₹3,380 அருகில் மூன்று முறை அடித்தளம் உருவாகி வலுவாக ஏறி வருகிறது. நல்ல வால்யூமும் உள்ளது.

இவை இன்ட்ராடே மற்றும் குறுகிய கால பரிந்துரைகள் மட்டுமே. உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனுக்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள். தேவைப்பட்டால் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசியுங்கள். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்கத்தை விடுங்க.. 2026ல் உச்சத்தை தொடப்போகும் வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா?
ஜோடிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. இனி நோ டென்ஷன்