மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த ஊதியக் குழுவை அரசு அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
மத்திய அரசு தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஃபார்முலா படி சம்பளம் வழங்குகிறது. அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீடு மற்றும் வாடகை, பயணப்படி, மருத்துவப்படி என சம்பளத்தில் உள்ள அனைத்து கூறுகளும் 7-வது ஊதியக்குழுவின் படியே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
8-வது ஊதியக்குழு
ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த ஊதியக் குழுவை அரசு அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதாவது 8வது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. எனினும், அரசாங்கம் இதுவரை அதற்கு எந்த உறுதியையும் அளிக்கவில்லை. எனினும் அடுத்த ஆண்டு மத்திய அரசு 8-வது ஊதிய குழுவை அமைக்க சாத்தியம் உள்ளதா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய ஊதிய குழு அமைக்கப்படும் போது மட்டும், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், அடுத்த ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசுக்கு இதுவரை எந்த யோசனையும் இல்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தெளிவுபடுத்தியிருந்தார். அத்தகைய முன்மொழிவை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்றும். ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்ய தனி திட்டமிடல் தேவை, அதுதான் அரசின் கவனம் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.
ஆனால் அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு அரசு பரிசு வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 7-வது ஊதியக் குழுவை உருவாக்கியதுடன், அகவிலைப்படியை திருத்துவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது. அதன்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அதன்பிறகு தற்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50% அகவிலைப்படி சேர்க்கப்பட்டு அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.
தீபாவளி சர்ப்ரைஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு - எப்போது தெரியுமா.?
ஆனால், தற்போதைய நிலவரப்படி, அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, அடுத்த திருத்தம் ஜனவரி 2024ல் இருக்கும். ஜனவரியில் 4% அகவிலைப்படி உயரும் பட்சத்தில் 50 சதவீதமாக உயரும். எனவே அந்த நேரத்தில் அகவிலைப்படி பூஜ்ஜியமாக குறைக்கப்படும். இந்த சூழலில் அரசு புதிய ஊதிய குழுவை அமைக்க வேண்டும். ஏனெனில், ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படும்..
கடந்த 2013-ம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு பரிந்துரைகளை அமல்படுத்த 3 ஆண்டுகள் ஆனது. எனவே புதிய ஊதியக் குழுவை அமைக்க அரசு இப்போதே பரிசீலிக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், தேர்தலுக்க்கு முன்பே 8-வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசின் நோக்கம் என்ன?
சம்பள திருத்தத்திற்காக ஊழியர்கள் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என அரசு கருதுகிறது எனவே. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணித்திறன் அடிப்படையில் அவர்களின் சம்பளம் திருத்தப்பட வேண்டும் என்று 7வது ஊதியக் குழுவில் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், சம்பளத்தை உயர்த்த ஊதியக் குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு புதிய வழியில் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் அரசு தெரிவிக்கவில்லை.
புதிய சம்பள கமிஷன் அமைக்கப்படுமா?
2024-ம் ஆண்டு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சம்பளத் திருத்தத்திற்கான அடிப்படையாக இது கருதப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது, 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில். பழைய ஃபார்முலாவில் சம்பளம் உயராது.. ஒவ்வொரு பணியாளரின் சம்பளமும் ஒரே வரியில் திருத்தப்படும் வகையில் சில புதிய செயல்திறன் சாதனைப் பதிவு உருவாக்கப்படும். ஊதிய குழுவுக்கு புதிய பெயரும் வைக்கப்படலாம். மேலும் 10 ஆண்டுகளுக்கு பதில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு இருக்க்கும் என பல ஊகங்கள் உள்ளன.
தொடர் வைப்புநிதி சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு: நிதி அமைச்சகம் அறிவிப்பு
யாருக்கு அதிக பயன்?
மத்திய ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 10 ஆண்டுகள் இடைவெளி அதிகமாக உள்ளது. இதை 1 அல்லது 3 வருடங்களாக மாற்றலாம். இதில் கீழ்மட்ட ஊழியர்களின் சம்பள திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் செயல்திறன் அடிப்படையில் செய்யப்படலாம். அதே நேரத்தில், அதிகபட்ச சம்பள பெறும் ஊழியர்களுக்கு 3 வருட இடைவெளியில் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம். இது கீழ்நிலை ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல திருத்தத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.