Wow! இனி அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு.. விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்..

By Ramya s  |  First Published Nov 25, 2023, 10:57 AM IST

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதால் 8-வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மத்திய அரசு தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஃபார்முலா படி சம்பளம் வழங்குகிறது. அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீடு மற்றும் வாடகை, பயணப்படி, மருத்துவப்படி என சம்பளத்தில் உள்ள அனைத்து கூறுகளும் 7-வது ஊதியக்குழுவின் படியே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக்குழு 2016-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதால் 8-வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

8-வது ஊதியக்குழு

Tap to resize

Latest Videos

8வது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பான விவாதம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், விரைவில் 5-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. புதிய ஊதிய குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும் என்பது தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

7-வது ஊதியக் குழுவை உருவாக்கியதுடன், அகவிலைப்படியை திருத்துவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது. அதன்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அதன்பிறகு தற்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50% அகவிலைப்படி சேர்க்கப்பட்டு அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.

அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உள்ளது. அடுத்த திருத்தம் ஜனவரி 2024ல் இருக்கும். ஜனவரியில் 4% அகவிலைப்படி உயரும் பட்சத்தில் 50 சதவீதமாக உயரும். எனவே அந்த நேரத்தில் அகவிலைப்படி பூஜ்ஜியமாக குறைக்கப்படும். அந்த நிலையில் அரசு ஊதியத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்படி ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமெனில் அரசு புதிய ஊதிய குழுவை அமைக்க வேண்டும். ஏனெனில், ஊதியக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் செய்ய முடியும்..

கடந்த 2013-ம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு பரிந்துரைகளை அமல்படுத்த 3 ஆண்டுகள் ஆனது. எனவே புதிய ஊதியக் குழுவை அமைக்க அரசு இப்போதே பரிசீலிக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், தேர்தலுக்க்கு முன்பே 8-வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசின் இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.5000 வருமானம் பெறலாம்..

அரசின் நோக்கம் என்ன?

பொதுவாக சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனில், ஊழியர்கள் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இனி 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என அரசு கருதுகிறது எனவே. ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் அவர்களின் சம்பளம் திருத்தப்பட வேண்டும் என்று 7வது ஊதியக் குழுவில் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், சம்பளத்தை உயர்த்த ஊதியக் குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் அரசு தெரிவிக்கவில்லை.

புதிய சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்?

2024-ம் ஆண்டு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சம்பளத் திருத்தத்திற்கான அடிப்படையாக இது கருதப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது, 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில். பழைய ஃபார்முலாவில் சம்பளம் உயராது.. ஒவ்வொரு பணியாளரின் சம்பளமும் ஒரே முறையில் திருத்தப்படும் வகையில் சில புதிய செயல்திறன் சாதனைப் பதிவு உருவாக்கப்படும். ஊதிய குழுவுக்கு புதிய பெயரை வைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு அதிக பயன்?

மத்திய ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 10 ஆண்டுகள் இடைவெளி அதிகமாக உள்ளது. இது 1 அல்லது 3 வருடங்களாக மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் செயல்திறன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படலாம். அதே நேரத்தில், அதிகபட்ச சம்பள பெறும் ஊழியர்களுக்கு 3 வருட இடைவெளியில் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம். எனவே இது குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளம் உயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!