அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) டிசம்பரில் 6 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு வங்கியைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு தேதிகளில் ஸ்டிரைக் நடத்தப் போகிறார்கள்.
டிசம்பர் மாதத்தில் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அவசரத் தேவைகளுக்காக வங்கிக்குச் செல்பவர்கள் இந்த விடுமுறை நாட்களைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே தங்கள் பேங்கிங் செயல்பாட்டை முடித்துக்கொள்வது நல்லது.
அதே நேரத்தில் இணைய வங்கிச் சேவைகளை எல்லா நாட்களிலும் வழக்கம்போல பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:
அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) டிசம்பரில் 6 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு வங்கியைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு தேதிகளில் ஸ்டிரைக் நடத்தப் போகிறார்கள்.
அதிவேக சார்ஜிங் வசதியுடன் 221 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்!
டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (SBI)
டிசம்பர் 5: பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா
டிசம்பர் 6: கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
டிசம்பர் 7: இந்தியன் வங்கி, UCO வங்கி
டிசம்பர் 8: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளும்
ரிசர்வ் வங்கி விடுமுறை:
கூடுதலாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) டிசம்பரில் சில விடுமுறை நாட்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி பின்வரும் நாட்களில் வங்கிகள் செயல்படாது.
1 டிசம்பர் 2023 - அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் மாநிலம் தோன்றிய நாள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
3 டிசம்பர் 2023 - மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
4 டிசம்பர் 2023 - புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா காரணமாக கோவாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
9 டிசம்பர் 2023 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை.
10 டிசம்பர் 2023 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை.
12 டிசம்பர் 2023 - மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
13 டிசம்பர் 2023 - சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
14 டிசம்பர் 2023- சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
17 டிசம்பர் 2023- ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
18 டிசம்பர் 2023 - மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
19 டிசம்பர் 2023 - விடுதலை நாள் காரணமாக கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
23 டிசம்பர் 2023 - நான்காவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.
24 டிசம்பர் 2023 - நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஞாயிறு விடுமுறை.
25 டிசம்பர் 2023 - கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
26 டிசம்பர் 2023 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மிசோரம், நாகாலாந்து, மேகாலயாவில் வங்கிகள் விடுமுறை
27 டிசம்பர் 2023 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக நாகாலாந்தில் வங்கி விடுமுறை.
30 டிசம்பர் 2023 - மேகாலயாவில் வங்கிகள் விடுமுறை
31 டிசம்பர் 2023 - ஞாயிறு விடுமுறை
வார இறுதி நாட்கள் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த வகையில் டிசம்பர் 3, 9, 10, 17, 23, 24, 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது.
இந்த ஆண்டு கல்யாண சீசனில் 38 லட்சம் திருமணங்கள்... 4.74 லட்சம் கோடி வர்த்தகம்: CAIT கணிப்பு