இந்த ஆண்டு திருமண சீசன் நாளை (நவம்பர் 23) தொடங்க இருக்கும் நிலையில், இந்த சீசனில் நாடு முழுவதும் 38 லட்சம் திருமணங்கள் நடக்கும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கணித்துள்ளது.
தீபாவளி விற்பனையைத் தொடர்ந்து நவம்பர் 23 முதல் தொடங்கும் திருமண சீசனுக்காக வர்த்தக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு திருமண சீசனில் இந்தியா முழுவதும் சுமார் 38 லட்சம் திருமணங்கள் நடக்கும் என்றும் இதன் மூலம் ரூ.4.74 லட்சம் கோடி மதிப்பில் வணிகம் நடக்கலாம் என்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கணித்துள்ளது.
கடந்த ஆண்டு கல்யாண சீசனில் சுமார் 32 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. இதனை மூலம் நடந்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ.3.75 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த ஆண்டில் நவம்பர் 23ஆம் தேதி (நாளை) வைகுண்ட ஏகாதசி அன்று திருமண சீசன் தொடங்குகிறது. திருமண சீசன் டிசம்பர் 15 வரை நீடிக்கும். நவம்பரில் 23, 24, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சுபமுகூர்த்த தினங்கள் வருகின்றன. டிசம்பர் மாதத்தில் 3, 4, 7, 8, 9 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சுபமுகூர்த்த நாள்கள் வருகின்றன.
வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?
இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, மீண்டும் திருமணங்கள் ஜனவரி நடுப்பகுதியில் அதிகம் நடைபெறும். அதிலிருந்து ஜூலை 2024 வரை திருமண சீசன் தொடரும்.
இந்நிலையில், இந்த ஆண்டில் திருமண சீசனில் சுமார் 38 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான பொருள்களை வாங்குவது மற்றும் பல்வேறு சேவைகளை பயன்படுத்துவது ஆகியவற்றுக்காக மக்கள் செய்யும் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டும் இந்த சீசனில் 4 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணங்கள் மூலம் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதிவேக சார்ஜிங் வசதியுடன் 221 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஆர்க்ஸா மண்டிஸ் எலெக்ட்ரிக் பைக்!