ரூ. 220 கோடி செலவில் நடந்த இந்தியாவின் விலை உயர்ந்த பார்ட்டி.. யார் நடத்தியது தெரியுமா?

By Ramya s  |  First Published Nov 22, 2023, 10:39 AM IST

2013-ம் ஆண்டில் கொண்டாடப்பட்ட நீட்டா அம்பானியின் பிறந்தநாள் விழா நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த பிறந்தநாள் விழாவாக கருதப்படுகிறது,


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தனது 50வது பிறந்தநாளை 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் கோலாகலமாக கொண்டாடினார். 2 நாள் கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழா நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த பிறந்தநாள் விழாவாகக் கூறப்பட்டது, இதன் செலவு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அந்த நேரத்தில் சுமார் ரூ.220 கோடிக்கு சமம்.

நவம்பர் 1, 2013 அன்று நடைபெற்ற இந்த ஆடம்பரமான விழாவில், சுமார் 250 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 32 விமானங்கள் மூலம் இடத்திற்கு விழா நடந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அதற்கான செலவை ரிலையன்ஸ் குழுமம் ஏற்றுக்கொண்டது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நவம்பர் 1 ஆம் தேதி தனத்திரியோதசி பூஜையுடன் இந்த கொண்டாட்டம் தொடங்கியது. அதில் நீட்டா அம்பானியின் பெயரை ஒளிர்விக்கும் விளக்குகள் இடம்பெற்றன. திருபாய் அம்பானியின் முகத்தை உருவாக்கும் ஒரு ஒளி காட்சி வானத்தை அலங்கரித்தது. இந்த ஒளிக்காட்சி காண்போரை வியக்க வைத்தது. திருபாய் அம்பானி லைட் எஃபெக்ட்களை ஒழுங்கமைக்க சிங்கப்பூரில் இருந்து பிரத்யேக குழு இந்தியா வந்தது.

குறைந்த விலையில் துபாயை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

மிட்டல் குடும்பம், மஹிந்திரா குடும்பம், பிர்லா குடும்பம், கோத்ரேஜ் குடும்பம் என நாட்டின் பெரும்பணக்கார குடும்பத்தினர், ஷாருக்கான், அமீர் கான், கரிஷ்மா கபூர், ராணி முகர்ஜி என முக்கிய சினிமா பிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். .

, பிரியங்கா சோப்ரா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர். நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானியும் சிறப்பு நிகழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த ஆடம்பர விழாவுக்கான பூக்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிகழ்வு அம்பானி குடும்பத்தின் அந்தஸ்துக்கு ஏற்ற உண்மையான காட்சியாக இருந்தது என்று பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டனர். 

click me!