புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு.. ஆன்லைன் ரம்மிக்கு 28 % வரி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By Raghupati R  |  First Published Jul 11, 2023, 10:13 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


டெல்லியில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர். முன்னதாக, ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

Tap to resize

Latest Videos

ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. 

தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு. தியேட்டர்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதேபோல, எல்டி ஸ்லாக் எனப்படும் சிமென்ட் வகை மற்றும் ஃப்ளை ஆஷ் எனப்படும் எரி சாம்பல் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இமிடேஷன் ஜரி நூல் வகை மீதான மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Fact Check : "ஏ தள்ளு தள்ளு தள்ளு" நடுவழியில் ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள் - வைரல் வீடியோ உண்மையா.?

click me!