2075ஆம் ஆண்டுக்குள் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அமெரிக்காவை முந்தும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு

By SG Balan  |  First Published Jul 11, 2023, 10:33 AM IST

2075ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என உலகளாவிய பொருளாதர ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் கணித்துள்ளது.


ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை விஞ்சும் வகையில், 2075-ல் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது.

சாதகமான மக்கள்தொகை, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், அதிக மூலதன முதலீடு மற்றும் அதிகரித்து வரும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சியின் முக்கியக் காரணிகளாகும் எனவும் கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை கூறுகிறது.

Tap to resize

Latest Videos

"அடுத்த இருபது ஆண்டுகளில், பிராந்திய பொருளாதாரங்களில் இந்தியாவின் சார்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கும்" எனவும் அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறப்பு: டெல்லி அரசுக்குப் பின்னடைவு

புதிய கண்டுபிடிப்புகள், தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் மூலதன முதலீடு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க உந்துதலாக இருக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பொருளாதார நிபுணர் சாந்தனு சென்குப்தா கூறுகிறார்.

"இந்தியாவின் மக்கள்தொகை அதற்குச் சாதகமாக உள்ளது. ஆனால் அது மட்டும் ஜிடிபி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கப்போவதில்லை. தொழிலாளர் உற்பத்தியை அதிகரிப்பது முக்கியமானதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"வீழ்ச்சியடையும் சார்பு விகிதங்கள், உயரும் வருமானங்கள் மற்றும் ஆழமான நிதித்துறை மேம்பாடு ஆகியவற்றால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது மேலும் முதலீட்டைப் பெருக்குவதற்கான மூலதனத்தை கிடைக்கச் செய்யும்" என்று சாந்தனு சென்குப்தா குறிப்பிடுகிறார்.

வேதாந்தாவை கைவிட்ட பாக்ஸ்கான்! திடீரென செமி கண்டக்டர் உற்பத்தி ஒப்பந்தம் முறிந்து ஏன்?

சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக கோல்டுமேன் சாக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தொழிலாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கும் தனியார் துறைக்கு இது பொருத்தமான நேரம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கருதுகிறது.

"கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ள கோல்டுமேன் சாக்ஸ் அறிக்கை, தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரிக்காவிட்டால், அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆபத்தாக இருக்கும் எனவும் எச்சரிக்கிறது. தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு விகிதம் ஆண்களை விட கணிசமான அளவு குறைவாக உள்ளது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வாங்கத் தூண்டும் விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர்! டாடா பஞ்ச்க்கு சவால் விடும் அதிரடி அறிமுகம்!

click me!