வேதாந்தாவை கைவிட்ட பாக்ஸ்கான்! திடீரென செமி கண்டக்டர் உற்பத்தி ஒப்பந்தம் முறிந்து ஏன்?

By SG Balan  |  First Published Jul 11, 2023, 9:55 AM IST

செமி கண்டக்டர் ஒப்பந்தம் குறித்து அரசு கேள்வி எழுப்பியதால் பாக்ஸ்கான் நிறுவனம் வேதாந்தாவுடனான ஒப்பந்தத்தில் வெளியேற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.


வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான திட்டத்தில் இருந்து பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் விலக முடிவு செய்தது. இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதாந்தாவுடனான ஒப்பந்தத்தில் இருத்து விலகும் பணியில் பாக்ஸ்கான் ஈடுபட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனமும் கடந்த ஆண்டு குஜராத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Latest Videos

undefined

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஒரு வருடத்திற்கும் மேலாக வேதாந்தா நிறுவனத்துடன் செமி கண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்குவது தொடர்பான பணிகளில் கடுமையாக உழைத்து வந்ததாவும் பாக்ஸ்கான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாக்ஸ்கான் இந்தியாவில் செமி கண்டக்டர் உறபத்தி வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு தொடர்ந்து வலுவான ஆதரவு அளிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்குப் பின், வேதாந்தா தனது செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும், இந்தியாவில் தங்கள் முதல் ஆலையை அமைப்பதற்கு வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்துவருவதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில் பாக்ஸ்கான் - வேதாந்த ஒப்பந்தம் முறிந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

அதில், "வேதாந்தாவுடனான கூட்டு முயற்சியில் இருந்து பாக்ஸ்கான் விலகுவது இந்தியாவின் செமி கண்டக்டர் உற்பத்தி இலக்குகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இரண்டு நிறுவனங்களும் இன்னும் இந்தியாவில் கணிசமான முதலீடுகளைக் கொண்டிருக்கின்றன. மதிப்புமிக்க முதலீட்டாளர்களான அவர்கள் வேலை வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் கொண்டுவருவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு நிறுவனங்களும் இந்தியாவில் சுதந்திரமாகவும், பொருத்தமான தொழில்நுட்ப கூட்டாளிகளுடனும் தங்கள் செமி கண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி முயற்சிகளைத் தொடரலாம் என்றும் அமைச்சர் ராஜீவ் கூறியுள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், இரண்டு நிறுவனங்களும் செமி கண்டக்டர் துறையில் நாட்டின் மேக்-இன்-இந்தியா திட்டத்தில் உறுதியாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், செமி கண்டக்டர் ஒப்பந்தம் குறித்து பாக்ஸ்கான் நிறுவனத்திடம் இந்திய அரசு கேள்விகளை எழுப்பியதாவும், அதன் எதிரொலியாகவே பாக்ஸ்கான் நிறுவனம் வேதாந்தாவுடனான ஒப்பந்தத்தில் வெளியேற முடிவு செய்தது எனவும் அந்த நிறுவனத்துக்கு நெருக்கமான ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

இந்த 6 வருமானங்களுக்கு வரி பொருந்தாது.. வருமான வரித்துறை விலக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா?

click me!