ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 இன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடாலடியாக நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் இந்த சட்டதிருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் மத்திய அரசு அதிரடியாக நிறைவேற்றியது. அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் உடனடியாகக் கிடைத்தது.
அடுத்த விசிட்.. பிரான்ஸ் நாட்டுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் - பிரதமர் மோடி போட்ட புது ஸ்கெட்ச்
எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் 3 ஆண்டு நிலுவைக்குப் பின் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதற்கு முன் இந்த வழக்கு கடந்த மார்ச் 2020 இல் வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் விசாரணையில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கி விசாரிக்கிறது. இன்றைய விசாரணையில் ஜம்மு காஷ்மீர் மக்களின் அனுமதியின்றி, நாடாளுமன்றத்தில் வைத்து 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மாநில சட்டமன்றம் செயல்படாத நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் 370வது சட்டப்பிரிவை குடியரசுத் தலைவர் பிரகடனத்தின் மூலம் ரத்து செய்தது ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
WhatsApp tip: வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன்! தவறாக அனுப்பிய மெசேஜை ஈசியாக திருத்துவது எப்படி?
இந்த வழக்கில் மத்திய அரசும் தனது தரப்பு வாதங்களை முன்வைத்து பிரமாணப் பத்திரம் தாக்கம் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்கத்தை சந்தித்து வருகிறது எனவும் அதைக் கட்டுப்படுத்த 370வது சட்டப்பிரிவை நீக்குவதுதான் ஒரே வழி என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இதற்கு முன் இல்லாத அமைதி நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 2018 இல் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய பிறகு ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வந்தது. அதன்பிறகு அங்கு சட்டமன்றத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!