
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் FZ S FI மோட்டார்சைக்கிளின் டி.எல்.எக்ஸ். வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், யமஹா நிறுவனம் 2022 FZS25 மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுபற்றி யமஹா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
2022 மோட்டார்சைக்கிள் மாடல் முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. இந்த மாடலிலும் 250சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 20 பி.ஹெச்.பி. திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், எல்.சி.டி. கன்சோல் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. விலையை பொருத்தவரை இந்த மாடலின் விலை தற்போதைய வேரியண்டை விட சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய யமஹா FZS25 மாடலின் விலை ரூ. 1.43 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய 2022 FZS25 மாடல் பஜாஜ் டாமினர் 250, பஜாஜ் பல்சர் F250 மற்றும் சுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக யமஹா நிறுவனம் தாய்வான் நாட்டில் கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய EMF எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. 2019 வாக்கில் EC-05 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த பின் அறிமுகமான இரண்டாவது மாடல் இது ஆகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.