alto k10: Maruti Alto: Suzuki புதிய மாருதி ‘மைலேஜ் அரசன்’ அல்டோ k10 கார்: ரூ.3.90 லட்சத்தில் அட்டகாச வசதிகள்

By Pothy RajFirst Published Aug 18, 2022, 5:10 PM IST
Highlights

நடுத்தரக் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாருதிசுஸூகி நிறுவனம் புதிய அல்டோ-K10 வகை காரைஇன்று அறிமுகம்செய்துள்ளது. ரூ.3.90 லட்சத்தில் ஏராள அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளது.

நடுத்தரக் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாருதிசுஸூகி நிறுவனம் புதிய அல்டோ-K10 வகை காரைஇன்று அறிமுகம்செய்துள்ளது. ரூ.3.90 லட்சத்தில் ஏராள அட்டகாசமான வசதிகளைக் கொண்டுள்ளது.

புதிய தலைமுறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டைலான, அதிகவசதிகள் கொண்ட அல்டோ-K10 கார் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.  ரூ.11ஆயிரம் செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம்.


 

ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மரணமும் 400 கோடி டாலர் பங்குகளும்: அடுத்தது என்ன?

எத்தனை வேரியன்ட்

அல்டோ-K10 கார் 7 வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Standard, LXi, LXi(O), VXi, VXi(O), VX+ and VXi+(O) ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் 6 வகையான நிறங்களில் அல்டோK-10 கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய முன்பக்க கிரில் மற்றும் அல்டோகாரின் முன்பக்கத்தை கவர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் முன்பக்க விளக்குகள் மிகப்பெரியதாகவும், சுற்றி அடிக்கும் வகையிலலும் உள்ளன.

பின்பகுதியில் ஸ்குவாரிஷ் டெயில் லேம்ப் பொருத்தப்பட்டிருப்பதால், கார் பார்ப்பவர்களை இழுக்கும். ஓஆர்விஎம்பகுதியில் இன்டிகேட்டர்கள் அமைக்கப்படாமல் பென்டர்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அல்டோ-K10 கேபினில் பழைய மாடல்களைப்போல் இல்லாமல் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்டீரியர் டிசைன்

‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

ப்ளாக் தீம் மாடலிலும், லேயர் டிசைனிலும் கேபின் அமைக்கப்பட்டுள்ளது. டச்ஸ்க்ரீன் இன்போடெயின்ட்மென்ட் பொருத்தப்பட்டுள்ளது, சென்டர் கன்சோலில் இருபக்கமும் சில்வர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டீரிங் வீல் புதிதாகவும் ஓட்டுநரை அனைத்தையும் கட்டுப்படுத்தும்வகையில் ஸ்டீரிவ் வீலில் அம்சங்கள் உள்ளன. காரின் அப்ஹோல்ஸ்ட்ரி அனைவரையும் மயக்கும் வகையில் புதிய டிசைனில் வடிமைக்கப்பட்டுள்ளது.

அல்டோ-K10 கார், 1.0 பெட்ரோல் எஞ்சினில் அதிகபட்சமாக 66பிஹெச்பி மற்றும் உச்சபட்சமாக 89என்எம் அளவில் செல்லக்கூடியது. 5 கியர் டிரான்ஸ்மிஷன், ஏடிஎஸ் டிரான்ஸ்மிஷன் உண்டு. இன்னும் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகமாகவில்லை. 

தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை: ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்த சிசிபிஏ

மைலேஜ் எவ்வளவு

அதிகபட்சமாக மைலேஜ் பெட்ரோல் லிட்டருக்கு 24.99கி.மீ கிடைக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் வந்த மாடலைவிட, அல்டோK10 கார், நீளமாகவும், பெரிய வீல்பேஸுடன் அமைந்திருக்கிறது. முன்பக்கம், பின்இருக்கையில் அமர்பவர்கள் கால்களை நீட்டி அமரும்வகையில் இடவசதி இருக்கிறது.

4 கதவுகளிலும் தரமான ஸ்பீக்கர்கள், ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டுவல் ஏர்பேக், ரியர் கார்பார்க்கிங் கேமிரா உதவி என ஏராளமான அம்சங்கள் உள்ளன.அல்டோ-K10 ஓட்டுபவர்கள் மனஅழுத்தம் இன்றி, பாதுகாப்பான பயனத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக மாசுள்ள நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பைக்கு இடம்: ரேங்க் என்ன?

விலை எவ்வளவு

அல்டோ-K10 காரின் விலை ரூ.3.90 லட்சத்தில் ஸ்டான்டர்ட் மாடலில் தொடங்குகிறது. அதன்பின் Lxi ரூ.4.82 லட்சம், vxiரூ.5 லட்சம்,  vxi+ ரூ.5.34 லட்சம் என்று விலை அதிகரிக்கிறது.
 

click me!