gold rate today: தங்கம் விலை இறங்குமுகம்: 600 ரூபாய்க்குமேல் குறைந்துவிட்டதா!: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Aug 18, 2022, 9:54 AM IST
Highlights

தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.600க்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.600க்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,849க்கும், சவரன் ரூ.38,792க்கும் விற்கப்பட்டது.

தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்

தங்கம் விலை இன்று காலை 3வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 11 ரூபாய் சரிந்து, ரூ.4,838 ஆகவும், சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704 ஆகவும் விற்கப்படுகிறது. 

கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4838ஆக விற்கப்படுகிறது. 

தங்கம் விலை இந்த வாரத்தில் 3-வது நாளாக இன்றும் விலை சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.600க்கு மேல் குறைந்துள்ளது. 

குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதியில் மாற்றமா? ரயில்வே துறை விளக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெறுவது போன்றவை தங்கம் விலை குறைவுக்கான காரணங்களாகும். 

கடந்த வாரத்தில் தங்கம் சவரன் ரூ.39ஆயிரத்தைத் தொட்ட நிலையில் மீண்டும் ரூ.38ஆயிரத்துக்குள் சரிந்துள்ளது.  இந்தவாரத்தில் நேற்று மட்டும் கிராமுக்கு 76 ரூபாய் குறைந்தது, சவரனுக்கு ரூ.608 குறைந்துள்ளது.

‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.90 பைசா குறைந்து, ரூ.62.40 ஆகவும், கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62,400க்கும் விற்கப்படுகிறது

click me!