பண்டிகை காலங்களில் 3 ல் ஒரு குடும்பம் ரூ.10,000 மேல் செலவழிப்பு.. ஆய்வறிக்கையில் வெளிவந்த தகவல்..

By Thanalakshmi VFirst Published Sep 24, 2022, 4:15 PM IST
Highlights

லோக்கல் சர்க்கிள்ஸ் எனும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு குடும்பம், இந்த பண்டிகை காலத்தில் ஷாப்பிங்கிற்காக ரூ.10,000 மேல் செலவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

லோக்கல் சர்க்கிள்ஸ் எனும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு குடும்பம், இந்த பண்டிகை காலத்தில் ஷாப்பிங்கிற்காக ரூ.10,000 மேல் செலவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆண்டு ஓட்டுமொத்தமாக 32 பில்லியன் டாலர் தாண்டி செலவிடப்படும் என்றும் கடைகளில் மக்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மக்கள் தங்களது மாதாந்திர செலவுகளை தாண்டி, பண்டிக்கை காலங்களில் எவ்வாறு செலவிடுகிறார் என்பது குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் எனும் தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.  நாடு முழுவதும் 362 மாவட்டங்களில் 58,000க்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 

இந்த கணக்கெடுப்பில், 64% ஆண்களும், 36% பெண்களும் பதிலளித்துள்ளனர். அதே போல் முதல் வகுப்பை சேர்ந்தவர்கள் 44 % பேரும், முதல்- நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் 33 % பேரும், 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மக்கள், கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் 23 % பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிடபப்ட்டுள்ளது. 

மேலும் படிக்க:யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவு வெளியீடு.. தகுதி பட்டியல் அறிவிப்பு.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?

அதன்படி லோக்கல் சர்க்கிள்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கைய்ல்,” பொதுவாக பண்டிகை நாட்களில் மேல் வகுப்பு மற்றும் நடுத்தர வகுப்புகளை சேர்ந்த மக்கள் தான் அதிகளவில்  பொருட்களை வாங்குகின்றனர்.இந்த வகை மக்களால், விழா நாட்களில் புது ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்குவது மங்களரமான மற்றும் வழக்கமான விஷயமாக கருதப்படுகிறது 

அதே நேரம் 35% சதவீத மக்கள் பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்குவது குறித்து எந்தவொரு திட்டமும் போடுவதில்லை. இவர்களில் பலரும் அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  முக்கியமாக இந்த கணக்கெடுப்பின் முடிவு மூலம் நன்கு செலவழிப்பவர்கள் மற்றும் திட்டமிடல் இல்லாதவர் இடையிலான பிளவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதை காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில்,”பல்வேறு குடும்பங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் அவதிப்பட்டு வருகின்றன. அதே நேரம் அதிகமாக செலவழிக்கும் வசதியான குடும்பங்களும் உள்ளன.இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமானது ஜூலை மாதத்தை விட ஆகஸ்டில் பொருட்கள் வாங்குவதில் நூகர்வோரின் உணர்வுகள் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது” என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:5g service in india: 5ஜி சேவை அக்டோபர் 1ம் தேதி அறிமுகம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
 

click me!